அமெ­ரிக்­காவில் 6 மாநி­லங்­களில் தேர்­­தல்... ஹிலா­ரிக்கு 26 வாக்குகளே தேவை !

அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்யும் உட்­­கட்­சி தேர்­தலில் அமெ­ரிக்­காவின் அதிக பிர­திநிதிகளைக் கொண்ட மாநி­லங்கள் உட்­பட 6 மாநி­லங்­க­ளில் இன்­றைய தினம் வாக்­களிப்பு நடை­பெ­ற­வுள்­ள­து.
நவர்­பர் மாதம் 8 ஆம் திகதி அமெ­ரி­க்க ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­ற­வுள்­ள­து. இந்­­­­நி­லையில், குடி­ய­ர­சுக்­கட்சி சார்பில் வேட்­பா­ளர்கள் அனை­வரும் வில­கி­யுள்ள நிலையில் போட்­டி­யின்­றி டொனால்ட் ட்ரம்ப் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது.

இந்­நி­லையில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்­ட­ன் அதிக பிரதிநி­தி­களின் ஆத­ர­வைப்­பெற்று முன்­னி­­லையில் உள்ளார்.

எனினும் ஜன­நா­யகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகுவதற்கு கட்சிப் பிரதிநிதிகளின் 2,383 வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும்.

ஹிலாரி கிளிண்டன் தற்போது 2,357 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு இன்னும் 26 வாக்குகளே தேவை. அவருக்குப் போட்டியாகவுள்ள பேர்ணி சாண்டர்ஸ் 1,566 வாக்குகளையே பெற்றுள்ளார்.

475 பிரதிநிதிகளின் வாக்குகளைக் கொண்ட கலிபோர்னியா மாநிலம், 126 பிரதிநிதிகளைக் கொண்ட நியூ ஜேர்ஸி மாநிலம், 18 பிர­தி­நி­தி­களை கொண்ட வடக்கு டாகோடா மாநிலம் 21 பிர­தி­நி­­தி­களை கொண்ட மொன்­டனா மாநிலம், 

34 பிர­தி­நி­தி­களை கொண்ட நியூ மெக்­ஸிகோ மாநிலம் மற்றும் 20 பிர­தி­நிதி­களை கொண்ட தென் டாகோடா மாநிலம் உட்பட 6 மாநிலங்களுக்கான ஜனநாயகக் கட்சியின் தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் ஹிலாரி கிளிண்டன் தனக்குத் தேவையான மேலும் 26 வாக்குகளைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings