6 ஆயிரத்து 550 அடிக்கு மேலே இருந்தபடி செல்பி !

இங்கிலாந்தின் ஷ்ரோப்ஷைர் கவுண்டியில் உள்ள ப்ரோசெலியைச் சேர்ந்தவர் லாரன் நாவல், சாகச விரும்பியான நாவல் சில தினங்களுக்கு முன் 6 ஆயிரத்து 550 அடிக்கு மேலே இருந்தபடி செல்பி எடுத்துள்ளார். 
இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா?

நாவல், அவ்வளவு உயரத்திற்கு சென்றது விமானத்திலோ, பாராசூட்டிலோ அல்ல. காற்றின் திசை மற்றும் வேகத்திற்கு ஏற்ப பறக்கும் பாராகிளைடர் மூலமாக. துருக்கியில் உள்ள மத்திய தரைக்கடலுக்கு மேலாகத்தான் அவர் இவ்வளவு உயரம் பறந்துள்ளார்.

இது பாராகிளைடிங் மூலமாக ஒருவர் தொடும் இரண்டாவது அதிகபட்ச உயரமாகும். இன்னொரு ஆச்சர்யமான தகவல், நாவலின் கொள்ளுத்தாத்தாதான் பாராசூட் மூலமாக ஸ்கைடைவிங் செய்த இங்கிலாந்தின் முதல் மனிதர்.

இந்த மயக்கம் தரும் செல்பியை எடுத்தது இவரது பயிற்றுவிப்பாளர். துருக்கியின் தென் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தனது பாய்பிரண்ட் மார்க்குடன்(20) தங்கியிருந்த போதுதான்,

நாவலுக்கு பாராகிளைடிங் செய்ய வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. 20 நிமிடம் பறப்பதற்குள் பல முறை 360 டிகிரி பாராகிளைடர் சுழன்றதாக தனது பாராகிளைடிங் அனுபவத்தை சொல்லும் நாவலிடம்,

அப்போ, பயமா இருந்ததா? என்று கேட்டால் மட்டும், “நோ.. நோ… ரொம்ப ஜாலியா, அமைதியா இருந்தது” என்கிறார். இப்போது நாவலின் அடுத்த இலக்கு தென் ஆப்பிரிக்கா சென்று பாராகிளைடிங் மூலம் அதிக உயரம் சென்றவர் என்ற சாதனையை படைப்பது.
Tags:
Privacy and cookie settings