746 மெட்ரிக் பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை அனுமதி.. தமிழக அரசு !

அங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் அங்கீகாரம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அப்பள்ளிகளுக்கு வரும் ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி அளிக்கப் பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்கப் பட்டது.
746 மெட்ரிக் பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை அனுமதி.. தமிழக அரசு !
சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அரசு நிர்ணித்த விதி முறைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மே 31 ஆம் தேதி வரை 

செயல்படுவதற்கு பள்ளிக் கல்வித்துறை தாற்காலிக அங்கீகாரம் வழங்கியது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை தமிழக அரசு முறையாக கடைபிடிக்க வில்லை. 

இந்த 746 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் மே 31-ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகளை மூட கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முன் வரவில்லை.

இதனால் இப்பள்ளிகளில் பயிலும் பல ஆயிரக்கண க்கான மாணவ, மாணவியர் மீண்டும் இதே பள்ளியில் படிப்பைத் தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். 
2 மாதம் போதிய அவகாசம் இருந்தும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. 

பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாட்டால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர் களின் படிப்பு பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டு ள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் நாராயணன் ஆஜராகி தனது கோரிக்கையை முன் வைத்து வாதிட்டார். 

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க ஏற்கெனவே ஜூன் 30 வரை தனி நீதிபதி காலஅவகாசம் கொடுத் துள்ளார். 

எனவே ஜூன் 30 வரை இப்பள்ளிகளுக்கு தற்காலிக கால நீட்டிப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ஒரு பிரச்சினைக்கு இயந்திர கதியில் தீர்வு காண முடியாது. 5 லட்சம் மாணவர் களின் நலன் தொடர்பான பிரச்சினை இது. 

எனவே இது தொடர்பாக தமிழக அரசு குறை பாடுகளைக் களைய உரிய தேதிக்கு முன்பாகவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டு விசாரணையை வரும் ஜூலை 19-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Tags:
Privacy and cookie settings