83 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி மறுப்பு !

நடப்பாண்டு 94 மருத்துவக் கல்லூரிகள் துவக்க விண்ணப்பங்கள் அளிக்கப்பட்ட நிலையில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. 
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆய்வு மற்றும் தொடர் கண்காணிப்பு உள்ளிட்டவையின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன.

கல்லூரி அமைவிடம், கட்டிட அமைப்பு, உபகரணங்கள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு புதிய கல்லூரி துவங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நடப்பாண்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் துவக்க 94 விண்ணப்பங்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு வந்த நிலையில், அவற்றில் 11 கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலின் அடிப்படையில் இம்முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதே போல நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 47 மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்தவும் 

அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 39 கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பாடப் பிரிவுகளை துவக்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை.
Tags:
Privacy and cookie settings