கிருஷ்ணகிரி அருகே பஸ் லாரி விபத்து 12 பேர் பலி !

தனியார் பஸ்சும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே இன்று மதியம் நடந்துள்ளது. 
கிருஷ்ணகிரி அருகே பஸ் லாரி விபத்து 12 பேர் பலி !
30க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அதில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

பெங்களூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை எண்-7 ல், கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் நகரங்களுக்கு நடுவேயுள்ள மேலுமலை என்ற பகுதியில் இன்று மதியம் சுமார் 3 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. 

கிருஷ்ணகிரி-மாலூர் நடுவே இயக்கப்படும் தனியார் பஸ்சும், எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய நிலையில், பஸ்சின் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த காரும் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி பஸ் மீது மோதி யுள்ளது. 

எனவே சங்கிலி தொடர் விபத்து போல நடந்த இதில் சிக்கி, 30க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந் துள்ளனர். 12 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
கிருஷ்ணகிரி அருகே பஸ் லாரி விபத்து 12 பேர் பலி !
அதேநேரம், சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும், தீயணைப்பு துறை அதிகாரி கோவிந்த சாமியோ, இந்த விபத்தில் 15 அல்லது 20பேர் வரை இறந்தி ருக்கலாம் என்று தெரிவிக்கிறார்.

பஸ் மிக மோசமான அளவில் சேதமடைந் துள்ளதால் உள்ளுக்குள் இருந்து உடல்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது. 

மேலும், காயமடைந் தோரில் பலர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதால் சிகிச்சை பலனளிக்கா விட்டால், பலி எண்ணிக்கை உயரும் அபாயமும் உள்ளது. 

படுகாயமடைந்தோர், தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கும், பெங்களூரிலுள்ள மருத்துவ மனைகளுக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். 

காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளன. 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். 

இந்த விபத்தால், பெங்களூர்-சேலம் நெடுஞ்சாலையில் பல கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. 
கிருஷ்ணகிரி அருகே பஸ் லாரி விபத்து 12 பேர் பலி !
தகவல் அறிந்த தனியார் வாகன ஓட்டிகள் கிருஷ்ண கிரியிலிருந்து ராயக்கோட்டை வழியாக சுற்றிக் கொண்டு ஒசூர் செல்கிறார்கள். 

லாரி டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ள தாக காவல் துறையினர் தெரிவிக் கிறார்கள்.
Tags:
Privacy and cookie settings