மலேரியா, டெங்கு, ஜிகா உள்ளிட்ட கொடிய தொற்றுநோய்க்கு காரணமான கொசுக்களை விரட்டும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டி.வி.க்களை தென் கொரியா நாட்டை சேர்ந்த
பிரபல எலெக்ரானிக்ஸ் வீட்டு உபகரண தயாரிப்பு நிறுவனமான எல்.ஜி. அறிமுகப்படுத்தியுள்ளது.
டி.வி. இயங்கும்போதும் அணைத்த பின்னரும் இயங்கக்கூடிய வகையிலான இந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த டி.வி. தென்கொரியா நாட்டின் தலைநகரான சியோலில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
26,500 முதம் 47,500 ரூபாய்க்குள் பல மாடல்களில் கிடைக்கும் இந்த டி.வி.க்கள் அடுத்த மாதம் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஜிகா வைரஸ் தோன்றியபோது, கொசுவிரட்டி தொழில்நுட்பத்துடன் கூடிய டி.வி.யை தயாரிப்பதற்கான திட்டத்தை தொடங்கிய எல்.ஜி. நிறுவனம்
தற்போது ரியோ ஒலிம்பிக் போட்டியின்போது ஜிகா தொற்று ஏற்படும் என்ற அச்சம் மேலோங்கியுள்ள நிலையில் இந்த டி.வி.யை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்ற தொழில்நுட்பம் ஏற்கனவே எல்.ஜி. ஏர்கண்டிஷனர், வாஷிங் மெஷின்களில் நடைமுறையில் உள்ளதாகவும், சென்னையில் உள்ள தனியார் ஆய்வகம் அளித்த முடிவின் அடிப்படையில்
அவை வெற்றிகரமாக செயல்படுவதாகவும், நாங்கள் எந்த கொசுவிரட்டி மருந்துகளுக்கு போட்டியாகவும் இதை செய்யவில்லை என்றும் எல்.ஜி. நிறுவனம் தெரிவித்துள்ளது.