நோன்பு வைத்திருக்கும் பொழுது குளிக்கலாமா?

நோன்பாளி குளிப்பதில் தவறில்லை: நபி (ஸல்) அவர்கள் (உடலுறவின் காரணமாக) முழுக்கான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு
நோன்பு வைத்திருக்கும் பொழுது குளிக்கலாமா?
குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பம் அல்லது தாகத்தின் காரணமாக தன் தலை மீது தண்ணீரை ஊற்றியதாக
இஸ்லாமியராக மாறி விட்டீர்களே, பார்க்க கஷ்டமாக உள்ளது - யுவன் சங்கர் பதில் !
சில நபித்தோழர்கள் மூலமாக அபூபக்ர் இப்னு அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: அஹ்மத், முஅத்தா, அபூதாவூத்) 

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது ஈரத்துணியை தன்மீது போடுவார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: தேவைப்படும் போது, நோன்பாளி பகல் நேரத்தில் குளித்துக் கொள்வதில் தவறில்லை. 

புகாரி (ரஹ்) அவர்கள், தன் புகாரி கிரந்தத்திலே நோன்பாளி குளிக்கும் பாடம் என தலைப்பிட்டு மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களைக் கூறி இருக்கின்றார்கள்.

நோன்பாளி பல் துலக்குவதில் குற்றமில்லை
என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லை என்றிருந்தால் ஒவ்வொரு முறை உளுச்செய்யும் போதும் பல் துலக்குவதற்கு நான் கட்டளை இட்டிருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி, நஸாயி)

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது கணக்கிட முடியாத அளவிற்கு பல் துலக்குவதை நான் பார்த்திருக்கின்றேன் என ஆமிர் இப்னு ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள், நோன்பு நோற்றிருக்கும் போது பகலின் ஆரம்பம் இன்னும் கடைசி நேரத்தில் பல் துலக்குவார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: பல் துலக்குவது நபி (ஸல்) அவர்கள் மிகவும் வலியுறுத்திய சுன்னத்தாகும். இதனை நோன்பிலும் நோன்பு அல்லாத காலங்களிலும் செய்துள்ளார்கள். 

சிலர் நோன்பு நோற்றவர் பல் துலக்குவது கூடாது என்றும், அல்லது லுஹர் நேரத்திற்குப்பின் செய்யக்கூடாது என்றும் கூறுவது ஆதாரமற்றதாகும்.

பெருந்தொடக்குள்ள பெண்கள்

நோன்பு வைத்திருக்கும் பொழுது குளிக்கலாமா?
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் வாழும் போது (மாதவிடாய் காரணமாக) சுத்தம் இல்லாமல் இருந்தால் (தொழவும் மாட்டோம், நோன்பு நோற்கவும் மாட்டோம்) 

சுத்தமானதும் நாங்கள் (விட்ட) நோன்புகளை நோற்கும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். 

ஆனால், விடுபட்ட தொழுகைகளைத் தொழும்படி ஏவமாட்டார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி)
விளக்கம்: 

பெண்கள் மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேறினால் சுத்தம் இல்லாத காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. 

சுத்தமானதும் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். அதற்காக எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.
Tags:
Privacy and cookie settings