மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ. 95 கோடியாக காட்டப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்தின் ரொக்க கையிருப்பு ரூ. 3.5 லட்சம் என்று அவர சமர்ப்பித்துள்ள சொத்து விவரப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்தின் சொத்துக் கணக்கு விவரம்:
ப.சிதம்பரம் தனது மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரத்தை 22 பக்கங்களில் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் குடும்பத்தினரின்
அசையும் சொத்து மதிப்பு ரூ. 54.30 கோடியாகும்.
அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 41.35 கோடியாகும்.
2014-15ம் நிதியாண்டில் ப.சிதம்பரத்தின் வருமானம் ரூ.8.58 கோடி. மனைவி நளினியின் வருமானம் ரூ.1.25 கோடி.
ப.சிதம்பரத்தின் பெயரில் உள்ள
அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 42.95 கோடி.
அசையா சொத்துக்கள் - ரூ.4.25 கோடி.
ப.சிதம்பரத்தின் ரொக்கக் கையிருப்பு
ரூ.3.5 லட்சம். 32 கிராம் தங்கமும் வைத்துள்ளார். அதன் மதிப்பு ரூ.87,232. இது தவிர ரூ.97,500 மதிப்பிலான 3.25 காரட் வைரமும் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நளினி சிதம்பரத்தின்
அசையும் சொத்து மதிப்பு ரூ. 11.23 கோடி,
அசையா சொத்து ரூ. 25.03 கோடி.
நளினி சிதம்பரத்தின் ரொக்க கையிருப்பு
ரூ.1.24 லட்சம். 1.43 கிலோ தங்கம் வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 39.17 லட்சம். இதுதவிர ரூ.22.98 லட்சம் மதிப்புள்ள வைரமும் வைத்துள்ளார். சிதம்பரத்துக்கு பல்வேறு மாநிலங்களில் மொத்தமாக 13 வங்கி கணக்குகள் உள்ளன.
நளினி சிதம்பரம் பெயரில் 6 வங்கி கணக்குகள் உள்ளன. சிதம்பரத்தின் மனைவியிடம் டொயோட்டா இன்னோவா கார் உள்ளது. ப.சிதம்பரம் ஸ்கோடா கார் வைத்துள்ளதாக அபிடவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.