லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மிகவும் திறன்மிக்க வாகனம் என்பது அனைவரு க்கும் தெரிந்த விஷ யமாகும். இதனை நிரூபிக்கும் விதமாக லேண்ட்ரோ வர் நிறுவ னத்தின்
டிஸ்கவரி ஸ்போர்ட், 108 டன் எடை கொண்ட ரயிலை இழுத்து சென்று சாதனை படைத் துள்ளது. லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், ஆன்-ரோட்
அல்லது ஆஃப்-ரோட் என எந்த விதமாக வேண்டுமா னாலும் உபயோகி க்கலாம். லேண்ட்ரோவர் நிறுவனம், ஒரிஜினல் லேண்ட்ரோவர் கார் கொண்டு, 27 ஆண்டுக ளுக்கு முன்னர் ஒரு ரயிலை இழுத்து சாதனை படைத்தது.
லேண்ட் ரோவர் நிறுவனம், இதே சாதனையை மீண்டும் நிகழ்த்த முடிவு செய்தது. இதற்காக, 2.0 லிட்டர் கொள்ளளவு கொண்ட லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், 108 டன் எடை கொண்ட ரயிலுடன் இணை க்கபட்டது.
ஸ்விட்சர் லாந்து நாட்டின் ம்யூசியம் பாஹ்ன் ஸ்டீன் அம் ரெய்ன் (Museumsbahn Stein am Rhein) என்ற பகுதியில் உள்ள ரயில் டிராக்கில், 108 டன் எடை கொண்ட ரயிலை இழுக்க துவங்கிய லேண் ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், 10 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றது.
இந்த 10 கிலோமீட்டர் தூரம் செல்லும் பாதையில், லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், ரைன் நதியை கடந்து, சுற்றியுள்ள பள்ளத் தாக்கில்
இருந்து 26 மீட்டர் உயரத்தில், 285 மீட்டர் நீளம் உள்ள ஹெமிஷோஃபென் பிரிட்ஜ் ஜையும் (Hemishofen bridge) கடந்து சென்றது.
இருந்து 26 மீட்டர் உயரத்தில், 285 மீட்டர் நீளம் உள்ள ஹெமிஷோஃபென் பிரிட்ஜ் ஜையும் (Hemishofen bridge) கடந்து சென்றது.
இந்த சாதனையை நிகழ்த்த, லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காருக்கு ஒரே ஒரு சிறு மாற்றம் தான் செய்ய பட்டது. இது ரயில் டிராக்கின் மீது கடந்து ஏதுவாக சிறிய ரயில்வே வீல்கள் பொருத் தபட்டது.