மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த பிரபல விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை பார்த்துவந்த ஒரு 29 வயது பெண், விமான கழிப்பறைகளுக்குள் விபச்சாரம் செய்த குற்றச்சாட்டின்கீழ் பணியில் இருந்து நீக்கபட்டு உள்ளார்.
குறிப்பாக, அமெரிக்காவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் நெடுநேர விமானங்களின் கழிப்பறைக்குள் இந்த தொழிலை உபரி வருமானத்துக்காக செய்து வந்த
அந்தப் பெண், பெரும்பாலும் மிகவும் வசதியான பணக்காரர்களுக்கு விமானம் பறந்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த சேவையை வழங்கி வந்துள்ளார்.
ஒரு விமான பயண நேரத்துக்குள் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயை இவர் சுலபமாக சம்பாதித்து வந்துள்ளார். கடந்த வாரத்தில் ஒரு பணக்கார பயணியுடன் விமான கழிப்பறைக்குள் அவர் உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
இவர் ஓவ்வொரு பயணத்தின் போதும் 1500 பவுண்டுகள் சம்பாதித்து உள்ளார்.இவர் வளைகுடா மற்றும் அமெரிக்கா இடையேயான பயணங்களுக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளார்.
தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் இதுவரை இந்த உபரி தொழிலின் மூலம் மட்டும் 6.5 லட்சம் பவுண்டுகளை (இந்திய மதிப்புக்கு சுமார் ஆறரை கோடி ரூபாய்) சம்பாதித்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்தப் பெண் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சவுதி அரேபியாவின் பிரபல நாளிதழ் ஒன்று, அந்தப் பெண்ணின் பெயரையோ, அவர் பணியாற்றிய விமான நிறுவனத்தின் பெயரையோ குறிப்பிடவில்லை.