காமராஜ், பாரதியார் போன்ற வர்களின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகி ரசிகர்க ளிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அம்பேத்கரின்
வாழ்க்கை வரலாறும் ‘பாபா சாகேப் என்ற பெயரில் சினிமா படமாகிறது. இப்படத்தை அஜய் குமார் என்பவர் இயக்கி, தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து அவர் கூறும்போது, டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் வாழ்கையை மையக ருவாக வைத்து உருவாக விருக்கும் திரைப்படம் தான் பாபா சாகேப்.
இது சாதி தலைவரின் படம் அல்ல, தேசத்தலை வரின் படம் என்பதை கருத்தாக கொண்டு உருவாக விருக்கும் படம்.
தமிழ் சினிமாவில் இப்பொழு தெல்லாம் ரவுடிகளின் வாழ்கையை அடிப்படை யாக கொண்ட திரைப் படங்கள் அதிகமாக வருகிறது,
நாம் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்கையை அடிப்படை யாக கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் இத்திரைப் படத்தை உருவாக்க விருக்கிறேன்.
ஹாலிவுட் டில் அட்டன்பிரோ என்ற இயக்குநர் காந்தியின் வாழ்கையை திரைப் படமாக எடுக்கும் பொழுது, தமிழனாகிய நான் ஏன் ஒரு தேச தலைவரின் வாழ்கை வரலாற்றை திரைப் படமாக எடுக்க கூடாது
என்ற எண்ணத் தின் வெளிப்பாடு தான் இந்த பாபா சாகேப். அம்பேத்கர் உருவம் கொண்ட ஒருவருக் காக சுமார் 10,000 பேர்க்கு மேல் தேர்வு நடத்தி னோம், கிடைக்க வில்லை.
இறுதியாக எங்கள் திரைப் படத்தின் ஒளிப்பதி வாளர் மோகன் ‘ஆய்வுக்கூடம்’ திரைப் படத்தின் நாயகன் ராஜ கணபதியை அறிமுகம் செய்தார்,
அவர் தோற்றத்தில் பாபா சாகேப் போல உள்ளதால் அவரை தேர்வு செய்தோம்,
மேலும் இத்திரைப் படத்திற் காக அம்பேத் கரின் குழந்தை மற்றும் இளமை வயது தோற்றத் திற்கும் பாரதியார், பெரியார் போன்ற பல்வேறு தலைவர்களு க்கான தேர்வு நடைபெற்று வருகிறது.
அன்னல் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் கொண்டா ட்டமும், நடிகர்களு க்கான தேர்வும் ஒரே நேரத்தில் நடை பெறுகிறது.
இப்படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமை க்கிறார். ரன் ஹார்ஸ் மீடியா நிறுவனம் சார்பில் அஜய் குமார் தயாரி க்கிறார்.