மாணவர்களின் கனவில் தவிடு பொடியாக்கிய நிறுவனங்கள் !

இன்றைய போட்டி மிகுந்த உலகில் படித்த படிப்புக்குத் தகுந்த வேலையைப் பெறுவது எவ்வளவு கடினமான காரியம் என்பது சொல்ல தேவை யில்லை. 
கல்லூரி படிப்பை முடித்துப் பல கனவுகளுடன் இருக்கும் மாணவர்கள், கேம்பஸ் இண்டர்வியூவில் தகுதித் தேர்வு,

நேர்முகத் தேர்வு எனப் பலகட்ட தேர்வுகளில் வெற்றி கண்ட பின், நிறுவனங்கள்


வேலைத் தருவதாய் உறுதி அளித்து விட்டு, தற்போது நிறுவனத்தில் சேர்க்க மறுக்கிறது.

வேலைக்கான ஆஃப்ர் லெட்டர் வழங்கியும் நிறுவன பணியில் அமர்த்தாத நிறுவனங்களை என்ன செய்வது..?

இப்படிச் செய்வது, பெயர் தெரியாத சிறிய நிறுவனங்கள் இல்லை பிளிப்கார்ட், எல் அண்ட் டி இன்போடெக் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள். ஆம் உண்மைதான்.

பிளிப்கார்ட்

நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த வருடத்தின் இறுதியில் ஐஐஎம் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் பல மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதி அளித்து ஆஃப் லெட்டரையும் வழங்கியது.

ஐஐஎம் கல்லூரி

மாணவர்கள் தங்களது படிப்பை முடித்து 6 மாதங்கள் ஆன நிலையிலும் கால் லெட்டர் எனப்படும், நிறுவன அழைப்பு இன்னும் அளிக்கவில்லை. ஐஐஎம் கல்லூரி மாணவர்களுக்கே இந்நிலை என்றால் பிற கல்லூரி மாணவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.
தகுதி இழப்பு

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த மட்டமான செயல் மூலம் ஐஐஎம் கல்லூரியில் நடப்பு நிதியாண்டின் கேம்பஸ் இண்டர்வியூவ் செய்ய அனுமதி மறுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

என்ன காரணம்..?

இந்த ஈகாமர்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல நிதி மற்றும் வர்த்தகச் சிக்கல் சந்தித்து வருவதால் அதிகச் சம்பளம் அளிக்க வேண்டிய ஐஐஎம் மாணவர்களின் பணி சேர்ப்பு நடவடிக்கையைத் தள்ளி வைத்துள்ளது.


இதன் மூலம் அதிகளவிலான செலவுகளைக் குறைக்க முடியும் என்பது பிளிப்கார்ட் திட்டம். இந்த 6 மாத காலம் தாமதம் 1 வருடம் வரை நீடிக்கலாம்..!

எல் அண்ட் டி நிறுவனம்

பிளிப்கார்ட் நிறுவனம் தான் இப்படி என்றால் எல் அண்ட் டி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவான எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம்

இந்தியாவில் பல கல்லூரிகளில் தங்களது நிறுவனத்தில் வேலை அளிப்பதாக 2014ஆம் ஆண்டில் உறுதி அளித்துச் சுமார் 5,000 பேருக்கு ஆஃபர் லெட்டரை வழங்கியது.
பரிதாப நிலையில் மாணவர்கள்

இந்நிலையில் 1.5 வருடமாக எதிர் பார்ப்புகளுடன் காத்திருந்த 5,000 மாணவர்களில் 1,500 மாணவர்களின் ஆஃபர் லெட்டரை திரும்பப் பெறுக் கொண்டுள்ளது.

எதிர்ப்பு

இதனை எதிர்த்து ஆஃபர் லெட்டர் திரும்பப்பெற்ற 1,500 மாணவர்களில் 100 மாணவர்கள், தங்களது கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இந்நிறுவனத்திற்கு எதிராகச் சென்னையில் போராட்டம் நடத்தினர்.

5,000 மாணவர்கள்

2014ஆம் ஆண்டு எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தால் ஆஃபர் லெட்டர் கொடுக்கப்பட்ட 5,000 மாணவர்களில் 3,000 பேர் இந்நிறுவனத்தின் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள 500 மாணவர்களுக்குக் கால் லெட்டர் எனப்படும் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவர் கூறினார். எஞ்சியுள்ள 1,500 மாணவர்களின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

மார்ச் 2016

ஆஃபர் லெட்டர் திரும்பப் பெற்ற 1,500 மாணவர்களுக்கு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. இதில் தாங்கள் மீண்டும் ஒரு சோதனை தேர்வு எழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
தேர்வு வினாக்கள் அனைத்தும் தங்களின் தகுதிக்கும் அதிகக் கடினமாக இருந்தது என்று மாணவர்கள் தெரிவித்தனர். சிலர் தேர்வில் வெற்றிபெற்றும் தங்களது ஆஃபர் லெட்டர் திரும்பப்பெற்றது எனவும் கூறினார்கள்.

எல் அண்ட் டி இன்போடெக்


இதுகுறித்து எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் இதுவரை எவ்விதமான பதில்களும் அளிக்கவில்லை என்பது வருத்தமான செய்தி.

ஐபிஓ

இந்நிலையில் எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனம் பங்குச்சந்தையில் இறங்குவதற்காகச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி-யிடம் அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி மற்றும் ஐஐஎம்

நாட்டின் முன்னணி கல்லூரிகளாக இருக்கும் ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரிகள் 2016ஆம் ஆண்டுக் கேம்பஸ் இண்டர்வியூவில் ஆன்லைன் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்குக் குறைந்த அளவிலான வாய்ப்புகள் மட்டும் அளிக்க முடிவு செய்துள்ளது.
மாணவர்களின் கனவு

3 வருடமோ, 4 வருடமோ கஷ்டப்பட்டுப் படித்து அதிக மதிப்பெண்களைப் பெறுவது மட்டும் போதாதென்று,

தன் படிப்புக்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொள்ளக் கூடுதலாகத் தொழில்நுட்ப கல்வி என மாணவர்கள் இன்று கண்ணும் கருத்துமாய்ப் படித்து வருகின்றனர், எதற்காக..?.

வேலை.. வாழ்க்கை..

படித்து முடித்த உடனேயே வேலைப் பெற வேண்டும் என்பதற்காகவே, இன்றைய போட்டி மிகுந்த உலகில் உரிய வேலையைத் தேடிக்கொள்வது எவ்வளவு கடினம் என்பது படித்து முடித்த மாணவர்களிடம் சில நிமிடங்கள் பேசினாலே தெரிந்துவிடும்.

கேம்பஸ் இன்டர்வியூவ்

ஐஐடி முதல் கிராமப்புற கல்லூரிகள் வரை இன்று அனைத்துக் கல்லூரிகளிலும் பெயருக்காவது கேம்பஸ் இன்டர்வியூவ் நடத்துகிறார்கள். இதில் மாணவர்களுக்கு வேலைக் கிடைக்கிறதோ இல்லையோ, கல்லூரி விளம்பரத்திற்குக் கண்டிப்பாக இது உதவுகிறது.


+2 மாணவர்கள்

பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் தங்களது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் கல்லூரி படிப்பையும், கல்லூரியும் தெளிவாகவும் தேர்தெடுக்க வேண்டும். விளம்பரங்களை மட்டும் பார்த்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.
Tags:
Privacy and cookie settings