இன்று சமூக வலை தளங்களில் முதலிடத்தில் இருப்பது.. தனுஷ் !

தமிழ்த் திரையுலகத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பது குறித்து கடந்த சில வருடங்களாகவே ஒரு சர்ச்சை எழுந்தது. 
இன்று சமூக வலை தளங்களில் முதலிடத்தில் இருப்பது..  தனுஷ் !
அதன் பின் அனை வருமே ரஜினிகாந்தைத் தவிர வேறு யாருமே சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்குத் தகுதியானவர்கள் இல்லை என்று அந்த சர்ச்சையை அப்படியே அழுத்தி மூடி விட்டனர். 

இருந்தாலும் சிலருக்கு தங்களை 'சூப்பர் ஸ்டார்' என்று அழைத்துக் கொள்ள ஆசை தான். 

தமிழைத் தவிர மற்ற மொழி ஊடகங்களில் தமிழில் உள்ள சில நடிகர்களை சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு பொதுவாக எழுது கிறார்கள்.

ஆனாலும், ரஜினிக்கு அடுத்து வியாபார ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் விஜய் தான் இருக்கிறார் என்பதை வினியோக ஸ்தர்களும், தியேட்டர் காரர்களும் தெரிவிக்கிறார்கள். 

அதை சமீபத்தில் வெளிவந்த 'தெறி' படமும் நிரூபித்தது. 

ரஜினி, விஜய்க்கு அடுத்து அந்த அளவிற்கு இல்லை யென்றாலும் அதில் பாதி இடத்தையாவது யார் பிடிப்பார்கள் என்று தற்போது ஓரளவிற்குத் தெரிய வந்துள்ளது. 
தொடர்ந்து வெற்றிகள் இல்லை யென்றாலும், திறமை விதத்திலும், குழந்தை ரசிகர் களைக் கவரும் விதத்திலும் தனுஷ் அவர்களது இடத்தை நோக்கிப் போய்க் கொண்டி ருக்கிறார். 

அதற்கு உதாரண மாக சமூக வலைத் தளங்களைச் சொல்லலாம். டிவிட்டரைப் பொறுத்த வரையில் ரஜினியைத் தொடர்ப வர்களின் எண்ணி க்கை 30 லட்சத்து 10 ஆயிரமாக உள்ளது. 

இவருக் கடுத்து தனுஷ் 29 லட்சத்து 90 ஆயிரம் தொடர்பாளர் களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இன்னும் 11 ஆயிரம் பேரைப் பெற்றால் ரஜினியையே தனுஷ் கடந்து விடுவார்.

ஃபேஸ்புக்கைப் பொறுத்த வரையில் விஜய்க்கு 53 லட்சம் தொடர் பாளர்கள் உள்ளனர். அதற்கடுத்து 40 லட்சம் தொடர்பாளர்களுடன் தனுஷ் இரண்டா மிடத்தில் உள்ளார்.

ரஜினி காந்த் டிவிட்டரில் மட்டுமே இருக்கிறார் ஃபேஸ் புக்கில் இல்லை. விஜய் ஃபேஸ்புக், டிவிட்டர் இரண்டிலும் இருக்கிறார். 
இருந்தாலும் இரண்டையும் சேர்த்து விஜய்யைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 59 லட்சம் தொடர்பாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், தனுஷுக்கு இரண்டையும் சேர்த்து 69 லட்சம் தொடர்பாளர்கள் உள்ளனர்.

ஆக, சமூக வலைத் தளங்களைப் பொறுத்த வரையில் ரஜினிகாந்த், விஜய்யை பின்னுக்குத் தள்ளி தனுஷ் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
Tags:
Privacy and cookie settings