உலகைச் சுற்றும் முயற்சியில் சோலார் இம்பல்ஸ் விமானம் !

சூரிய சக்தியால் இயங்கும் சோலார் இம்பல்ஸ் என்னும் விமானம் உலகைச் சுற்றிவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பயணத்தின் ஒரு முயற்சியாக நியூயார்க்கில் இருந்து 
ஸ்பெயினுக்கு செல்லும் நீண்ட பயணத்தை சோலார் இம்பல்ஸ் விமானம் தொடங்கியுள்ளது. அதன்படி சோலார் இம்பல்ஸ் விமானம் முதற்கட்டமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து

ஸ்பெயினின் செவெல் நகருக்கு செல்லவுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலை தாண்டி செல்லும் இந்த பயணத்திற்கு 90 மணிநேரம் ஆகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்க இந்த விமானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

ஜம்போ ஜெட் ரக விமானத்தைவிட நீளமான இறக்கை கொண்ட சோலார் இம்பல்ஸ் விமானம் ஒரு காருக்கு நிகரான எடை கொண்டவையாகும்.
Tags:
Privacy and cookie settings