முதிய பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர் ஒருவரை சூர்யா ஓங்கி அறைந்ததாகவும், இதனால் அந்த இளைஞர் மயங்கி விழுந்ததாகவும் பரபரத்துக் கிடக்கிறது கோடம்பாக்கம்.
இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக ஏராளமானோர் சமூக வலைத் தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய இளைஞர்களுக்கு, குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை விதி முறைகள் பற்றி இம்மியளவு கூட கவலை கிடையாது.
ஒரு வாகனத்துக்கு பின்னால் செல்லும் போது, அந்த வாகனத்தை தொட்டபடி செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
குறைந்தது 4 மீட்டர் இடைவெளியிலாவது செல்ல வேண்டும். அப்போது தான் முன்னால் செல்பவர் திடீரென நிறுத்தினாலும் (சடன் பிரேக்) பின்னால் வருபவர் மோதலைத் தவிக்க முடியும்.
அந்த குறைந்தபட்ச யோசனை கூட இல்லாமல் செல்வதன் விளைவை அனுபவிக்கட்டும் இந்த இளைஞர்கள் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
'சூர்யா நிஜத்திலும் ஒரு ஹீரோவாகத் தான் நடந்து கொண்டிருக்கிறார். தவறு செய்துவிட்டு வீம்புக்கு மல்லுக் கட்டியவர்களை கொஞ்சவா முடியும். ரெண்டு விட்டாதான் புத்தி வரும்' என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
'சிங்கம் படத்தில் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா பாக்குறியா' என்று கர்ஜித்த சூர்யா, நிஜத்திலும் செய்து காட்டி விட்டார்' என்று இந்த ரணகளத்திலும் குதூகலமாக மீம்ஸ் போட்டு வருகின்றனர் இன்னும் சிலர்!