அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தரத்தை எட்டாத இந்திய மாணவர்கள் வெளியேற்றம் !

அமெரிக்காவில் கென்டக்கி மாகாணத்தில் பவுலிங் கிரீன் நகரில் மேற்கு கென்டக்கி பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு இந்திய மாணவர்கள் 60 பேர்
கடந்த ஜனவரி மாதம் கம்ப்யூட்டர் அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்து, படித்து வருகின்றனர்.

முதல் பருவ தேர்வுகள் முடிந்த நிலையில், 60 பேரில் 25 மாணவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு தரத்தை எட்டிப்பிடிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த 25 மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக அவர்கள் ஒன்று நாடு திரும்ப வேண்டும் அல்லது அங்குள்ள வேறு ஏதாவது பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கி படிக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்க தலைவர் ஆதித்ய சர்மா வருத்தம் வெளியிட்டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings