தன்னுடைய வேதனையை சாதனையாக மாற்றிய பெண் !

பொதுவாக பெண்கள் என்றாலே அழகாகவும் இளமையாவும் இருக்கவே அதிகம் விருப்புவார்கள். ஆனால் ஒருசிலர் பருமனான உடல்வாகுடன் அழகு குறைந்து காணப்படுவது இயற்கையே. 
அந்த வகையில் 23 வயதான கெலி கிரைப்கோவும் (Keli Kryfko) பருமனான உடல்வாகு கொண்ட இளம் யுவதி. இந்தப் யுவதி தனது 14 வயதில் 200 இறாத்தல் எடையுடன் காணப்பட்டார். 

அளவுக்கதிகமான உடற் பருமனால் ஏனையவரின் நகைப்புக்கும் கேலிக்கும் உள்ளானர். இதனால் விரக்தியடைந்த யுவதி, தனது உடல் எடையை குறைக்க கடும் முயற்சி செய்தார்.

இதற்காக இனிப்பான பானங்களை அருந்துவதையும் கொழுப்பு நிறைந்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்த்து தனது நிறையை 100 இறாத்தலால் குறைத்தார். 

அதிலும் திருப்தி காணாத கெலி, அழகு ராணி போட்டியில் பங்கு பற்றி தன்னை ஒரு அழகியாக நிரூபித்துள்ளார். 
அமெரிக்கா தென் டெக்ஸாஸ் மாநிலத்தின் அழகுராணியாக தெரிவாகி சாதனை படைத்துள்ளார். வேதனையை சாதனையாக மாற்றிய யுவதியை காண காணொளியை பாருங்கள்.
Tags:
Privacy and cookie settings