‘லண்டன் பிரிட்ஜ்’ (லண்டன் பாலம்) என்று தவறுதலாக அழைக்கப்படும் லண்டனின் பிரபலமான ‘டவர் பிரிட்ஜ்’ஜில் பொதுமக்கள் செல்லும் பகுதியில் புதிதாக கண்ணாடி நடை ஒன்று அமைக்க ப்பட்டுள்ளது.
கப்பல்களுக்கு மூடித்திறக்கும் அந்தப் பாலத்தின் பகுதியையும் கீழே செல்லும் வாகனங்களையும் அந்த கண்ணாடியின் ஊடாக பார்வையாளர்கள் பார்க்க முடியும்.
தேம்ஸ் நதிக்கு மேலே 138 அடி உயரத்திலுள்ள இந்த கண்ணாடி நடையில் நின்று கொண்டு பார்வையாளர்கள் தமக்கு உயரம் குறித்த பயம் இருக்கிறதா என்பதையும் சோதிக்க முடியும்.
10 லட்சம் பவுண்கள் செலவில் அமைக்கப் பட்டுள்ள இந்த 11 மீட்டர் நீளமான கண்ணாடி நடையில் நின்று கீழே அந்தப் பாலம் கப்பல்களுக்கு மூடித்திறக்கும் அழகையும் ரசிக்க முடியும்.
அதனூடாக படகுகள் செல்வது, வாகனங்கள் பாலத்தில் செல்வது ஆகியவற்றையும் ரசிக்கலாம்.