ஹேமமாலினியின் உண்மை முகம்...மதுராவில் !

ரோம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை, ஹேமமாலினிக்கு பக்காவாக பொருந்துகிறது. ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் நடுவே நடந்த மோதலில் 
ஒரு எஸ்.பி உட்பட 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு மதுரா நகரமே கொந்தளிப்பில் இருக்கும் சூழலில், மதுரா எம்.பியான நடிகை ஹேமமாலினியோ,

தனது புதிய திரைப்பட ஸ்டில்களை டிவிட்டரில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்ததை பிறகு வேறு எப்படித்தான் சொல்ல முடியும்? மதுராவில் நேற்று தொடங்கிய கலவரம் இன்னும் முழுமையாக அடங்கவில்லை. 

ஆனால் மும்பையில் இருந்தபடி புதுப்பட ஸ்டில்களை டிவிட்டரில் பதிவிட்டு வந்தார் ஹேமமாலினி. கொந்தளித்துப்போன நெட்டிசன்கள் திட்டி தீர்க்க ஆரம்பித்தனர்., மீடியாக்களில் செய்தி வெளியாக ஆரம்பித்தது. 

தப்பை உணர்ந்து நாக்கை கடித்துக்கொண்ட ஹேமமாலினி, உடனே, சூட்டிங்கிற்கு பிரேக் சொல்லிவிட்டு, 

அவசர அவசரமாக போட்ட டிவிட்டையெல்லாம் டெலிட் செய்துள்ளார். இதன்பிறகு, மதுரா கலவரம் குறித்து அவரது 'மேலான கருத்துக்களை' டிவிட்டரில் கூறியுள்ளார் ஹேமமாலினி. 
அடுத்த வருடம் தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தை கைப்பற்ற பாஜக முழு வீச்சில் தயாராகியுள்ள நிலையில், ஹேமமாலினியின் செயல்பாடு அந்த கட்சியின் தலைமைக்கு தலை வலியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
Privacy and cookie settings