பிரகாஷை கழட்டி விட்ட தனுஷ்.. செயல்படுத்திய வெற்றிமாறன் !

1 minute read
வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் தான். பொல்லாதவன் படத்திலிருந்தே இந்த கூட்டணி தொடர்கிறது. 
பிரகாஷை கழட்டி விட்ட தனுஷ்.. செயல்படுத்திய வெற்றிமாறன் !

தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாது தான் தயாரிக்கும் படங்கள், தன் உதவியாளர்கள் இயக்கும் படங்கள் என எல்லா வற்றுக்குமே ஜிவி.பிரகாஷ் தான் இசை என்பதில் பிடிவாதமாக இருப்பார் வெற்றி.   


நேற்று பூஜையுடன் தொடங்கிய வடசென்னை படத்துக்கும் ஜிவி.பிரகாஷ்தான் இசையமைப்பதாக சொல்லி வந்தார். 

ஆனால் இப்போது ஜிவிக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கப் போகிறாராம். காரணம் தனுஷ். ஆமாம், தனுஷுக்கு ஜிவி.பிரகாஷுக்கும் நெடுநாள் பனிப்போர் இருந்து வருகிறது. 

3 படத்துக்காக ஜிவி. பிரகாஷை கமிட் செய்து விட்டு பின்னர் அனிருத்தை அறிமுகப்படுத்தி ஜிவிக்கு போட்டியாகவே வளர்த்து விட்டார் தனுஷ். 

இதில் ஆரம்பித்த மோதல் இன்னும் தொடர்கிறது. 

சமீபத்தில் வெளியான எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் கூட தனுஷை அதிகம் கிண்டல் பண்ணியிருந்தார் ஜிவி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings