சவூதி அரேபியாவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் உதயமாகிறது வட்டியில்லா இஸ்லாமிய வங்கி உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான
சவூதி அரேபியாவிலுள்ள இஸ்லாமிய வங்கி ISLAMIC DEVELOPMENT BANK (IDB) தனது கிளையை இந்தியா முழுவதும் தொடங்க இருக்கிறது. முதல் கிளையை குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் துவங்க உள்ளது.
இந்திய பிரதமர் மோடியும் சவுதி மன்னர் சல்மானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த கிளை துவக்கப்பட உள்ளது. இந்த வங்கி முழுக்க முழுக்க இஸ்லாமிய முறைப்படி வட்டியின்றி செயல்படும்.
வைப்பு நிதிகளுக்கும் வட்டி கிடையாது. விவசாயிகள் வாங்கும் லோன்களுக்கும் வட்டி கிடையாது. வங்கி வருவாய்க்கு பெரும் தொழில்களில் முதலீடு செய்யும்.
இதனால் வட்டியினால் தற்கொலை செய்து கொள்ளும் பல ஆயிரம் விவசாயிகள் நிம்மதி பெரு மூச்சு விடுவர்.
இதனால் வட்டியினால் தற்கொலை செய்து கொள்ளும் பல ஆயிரம் விவசாயிகள் நிம்மதி பெரு மூச்சு விடுவர்.
சவூதிஅரேபியாவில் இயங்கும் இந்த வங்கி இன்னும் சில நாட்களில் இந்தியா முழுக்க தனது கிளையை தொடங்க உள்ளது.
இந்த வங்கியானது 56 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பில் உருவாகியுள்ளது. இதில் கால் பங்கு ஷேர்களை சவுதி அரேபியா கொடுத்துள்ளது. அமீரகமும் இதில் முக்கிய ஷேர் ஹோல்டர்.
இந்த வங்கியானது 56 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பில் உருவாகியுள்ளது. இதில் கால் பங்கு ஷேர்களை சவுதி அரேபியா கொடுத்துள்ளது. அமீரகமும் இதில் முக்கிய ஷேர் ஹோல்டர்.