வானிலை மாற்­றம் விஷத்­தன்­மை கொண்­ட­ பயிர்கள், விலங்குகள் !

கடு­மை­யான வானிலை மாற்­றங்­களால் பல பயிர்கள், விலங்­குகள் விஷத்­தன்மை கொண்­ட­தாக மாறி வரும்நிலை அதி­க­ரித்து வரு­வ­தாக ஐ.நா. எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

வறட்சி மற்றும் அதி­கப்­ப­டி­யான வெப்பநிலை இர­சா­யன கல­வை­களின் குவிப்­புக்கு வழி­வகை செய்­கி­றது என வெளிப்­ப­டுத்­திய ஆய்வு ஒன்றை சுட்­டிக்­காட்டி ஒரு புதிய அறிக்­கையை ஐ.நா. வெளி­யிட்­டுள்­ளது.

குறிப்­பாக கோதுமை, சிறு தானியம், சோளம் ஆகிய பயிர்கள் பொது­வாக உரங்­களில் பயன்­ப­டுத்­தப்­படும் ஆபத்­துக்­களை விளை­விக்­கக்­கூ­டிய நைட்­ரேட்­டுகள் அதி­க­ரிப்­பதால் பாதிப்­புக்­குள்­ளாகக்கூடிய நிலையில் உள்­ளன.

உலக­ளவில் 70 சத­வீத விவ­சாய உற்­பத்தி பாதிப்­புக்குள்­ளா­வ­தோடு நான்­கரை பில்­லியன் மக்கள் இந்த விஷத்­தன்மை ஆபத்­திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings