ஹோட்டலில் நிர்வாணமாக சாப்பிடலாம்...!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புதுமையாக 'தி பனியாடி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள ஹோட்டல் திறக்கப்பட உள்ளது. இங்கு செயற்கையாக தயாரிக்கப்படாமல் முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன. 
 அந்த ஹோட்டலில் தயாரித்து வழங்கப்படும் உணவு வகைகளில் தூய்மை கேடுகள் எதுவும் இருக்காது. அதில் ரசாயன பொருட்கள், செயற்கை தனமான வண்ணங்கள் கலக்கப்பட மாட்டாது.

உணவு சாப்பிடும் இடத்தில் மின்சார வசதி, செல்போன் மற்றும் டெலிபோன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களோ கிடையாது. இவை அனைத்தையும் விட உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் இஷ்டப்படி ஆடையுடன் இருக்கலாம் 

அல்லது ஆடை இல்லாமலும் இருக்கலாம். இது வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் பொருத்தது. பாதி உடை அணிந்தும் உணவு அருந்தலாம். இங்கு ஒயின் மட்டுமே சப்ளை செய்யப்படும். 

விஸ்கி, பிராந்தி உள்ளிட்ட மற்ற மதுபான வகைகள் சப்ளை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு நிர்வாணமாக உணவு சாப்பிடுபவர்களுக்கு ‘பர்த்டே' அறை ஒதுக்கப்படும். 

இந்த ஹோட்டலுக்கு இந்தியில் ‘பனியாடி' என பெயரிட்டுள்ளனர். இதற்கு தமிழில் ‘அடிப்படை' என அர்த்தமாகும். இந்த புதுமையான ஹோட்டலை லண்டனை சேர்ந்த செப்லியாலி என்பவர் தொடங்க உள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், சாப்பிட வரும் பொது மக்கள் எந்தவித கட்டுப்பாடும் கவலையுமின்றி மகிழ்ச்சியாக இரவு பொழுதை கழிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஹோட்டலை பார்த்து பார்த்து பிரத்யேகமாக வடிவமைத்துள்ளோம்.

இங்குள்ள அறைகள் முழுவதும் மூங்கிலால் அமைக்கப்பட்டுள்ளது. அறைகளுக்கு மெழுகுவர்த்தி வழங்கப்படும். உணவு வகைகள் மண் பாத்திரத்தில் சமைத்து வழங்கப்படும்.
சனிக்கிழமைகளிலும் உணவு விடுதி திறந்து இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார். மேலும், சைவப்பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்களுக்கு என்று தனித்தனியாக உணவு வழங்கப்படுகிறது. 

இங்கு 42 இருக்கைகளே அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஹோட்டல் தொடங்குவதற்கு முன்பே இதற்கு ‘கிராக்கி' அதிகரித்துள்ளது. 44,200 பேர் ‘புக்' செய்து ‘வெயிட்டிங் லிஸ்ட்' டில் அதாவது காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
Tags:
Privacy and cookie settings