அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து வெளியாகும் தொடர் நாடகம் தான் பே-வாஜ் BAY WATCH (கடலை கண்காணிக்கும் நீச்சல்காரர்கள்).
இந்த உயிர்காக்கும் நீச்சல்காரர்கள் நிறையப் பேர் கடல்கரைகளில் நிற்பது வழக்கம். கடலில் குளிக்கவரும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தில் சிக்கினால் இவர்கள் தான் நீந்திச் சென்று காப்பாற்றுவார்கள்.
பொதுவாக மிகவும் கட்டழகுகொண்ட ஆண்களும், பெண்களுமே இத்தொழிலில் ஈடுபடுவது உண்டு. இதனை வைத்து தொடர் நாடகம் ஒன்றை அவுஸ்திரேலிய TV ஒன்று தயாரித்து வெளியிட்டு வருகிறது.
உலகம் பூராகவும் இன் நிகழ்சியை இளசுகள் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் தான் இந்த நாடகத்தில் ஷானியா இணைந்து கொண்டார். இவர் ஒரு இந்திய வம்சாவழி என்று பலராலும் கூறப்படுகிறது. ஆனால் அது உண்மை அல்ல.
அவர் பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண். அடிக்கடி நீச்சல் உடையோடு வந்து நடித்து பலரது இதயத்தை கொள்ளையடித்து வருகிறார். அவர் சமீபத்தில் தனது படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த பலர் ஆடிப்போனார்கள்.
காரணம் என்னவென்றால் , அவரது தொடையில் உள்ள குழி ஒன்று தான் என்கிறார்கள். சாதாரண பெண்களின் தொடயில் இதுபோன்ற குழி இருக்காது என்கிறார்கள்.