தற்கொலைக்காக மாடியில் இருந்து குதித்தவர்.. சாலையில் சென்றவர் சாவு..!

தென்கொரியாவில் உள்ள குவான்சூ என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் 20–வது மாடியில் 25 வயது மாணவர் ஒருவர் வசித்து வந்தார்.
அவர் தற்கொலை செய்ய முடிவெடுத்து 20–வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

அப்போது சாலையில் 38 வயது அரசு ஊழியர் ஒருவர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 5 வயது மகனுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

மேலே இருந்து குதித்த மாணவர் அவர் மீது பொத்தென விழுந்தார். விழுந்த வேகத்தில் உடலில் அடிபட்டு மாணவர் அந்த இடத்திலேயே இறந்தார்.

அரசு ஊழியருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். சிறிது நேரத்தில் அவரும் இறந்துவிட்டார்.
Tags:
Privacy and cookie settings