ஸ்கொட்லாந்தில் முஸ்லிம் பெண் போலீசார் ஹிஜாப் அணிந்து கடமை !

குற்றச் செயல்களை பிடிப்பதில் உலகப்புகழ் பெற்றது ஸ்கொட்லாந்தின் போலிஸ் என்பது அறிந்ததே.. இந்நிலையில் இங்கு முஸ்லிம் பெண்கள் பொலிஸ் தொழிலில் 
இணைவதை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கென ஹிஜாப் ஒன்றை அறிமுகப்படுத்த ஸ்கொட்லாந்து பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

தலை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகள் மறைக்கப்படும் அதே வேளை, முகத்தினை மறைக்காது குறித்த ஹிஜாப்பினை அணியும் வகையிலான விதத்தில், 

பெண்போலிஸாருக்கான ஹிஜாப் தயாரிக்கப்பட வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம், கறுப்பின மற்றும் ஆசிய நாட்டை சேர்ந்த பெண்களை அதிகளவில் பொலிஸ் படையில் இணைத்துக்கொள்ளலாம் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு போலிஸ் பணியில் ஈடுபட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டுமாயின் அவர்கள் சிரேஷ்ட அதிகாரியின் உத்தரவை பெறுவது 

கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பெண் பொலிஸாருக்கான ஹிஜாப் தயாரிக்கப்பட வேண்டும் என பொலிஸாரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings