மழை வருவதை துல்லியமாக கணிக்க இந்திய – இங்கிலாந்து விஞ்ஞானிகள் இணைந்து வங்க கடலில் தண்ணீருக்கு அடியில் ரோபாட்டுகள் அமைக்கின்றன.
அளவுக்கு அதிகமாக பருவமழை பெய்து பெருத்த சேதம் ஏற்படுகிறது. அதை தடுத்து முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மழை வருவதை துல்லியமாக கணிக்க வங்க கடலில் தண்ணீருக்கு அடியில் ‘ரோபாட்டுகள்’ அமைக்கப்பட உள்ளன.
இதன் மூலம் கடலில் ஏற்படும் புயல், காற்றழுத்த தாழ்வு நிலையை கணித்து மழை பெய்யும் தன்மையை கண்டறிய முடியும். இப்பணியை வங்காள விரிகுடா படுகை ஆய்வகம் (போபிள்) விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர்.
இவர்களுடன் இங்கிலாந்தை சேர்ந்த கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் சவுத் ஆம்டனில் உள்ள தேசிய கடல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் சென்னையில் இருந்து வருகிற 24–ந் தேதி சிந்து சாதனா என்ற இந்திய ஆராய்ச்சி கப்பல் மூலம் பயணம் செய்ய உள்ளனர். இத்தகவலை பூமி அறிவியல் அமைச்சக செயலாளர் ராஜீவன் தெரிவித்தார்.