ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு! அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும்… ஆச்சு! இது கிராமத்தில் கேட்கின்ற வழக்கமான வாக்கியம். ஒரு நேரத்தில் ஒரு வேலை தானே செய்ய முடியும்.
இது எப்படி? என்று நினைக்கத் தோன்றும். இது நேரத்தின் முக்கியத் துவத்தை சொல்லித் தருகின்ற கிராமத்தின் நேர்த்தி.
கோவையி லிருந்து பழனிக்கு ஒரு வேலை நிமித்தம் செல்கின்ற ஒருவருக்கு பொள்ளாச்சி யில் வேறு ஒரு வேலை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
அவர் பழனிக்குப் போகின்ற போதோ அல்லது பழனியிலிருந்து திரும்பும் போதோ அந்த வேலையை முடிக்க வேண்டும். அதற்கான நேரத்தை அவர்தான் சரிசெய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அவர் பழனிக்குப் போகின்ற போதோ அல்லது பழனியிலிருந்து திரும்பும் போதோ அந்த வேலையை முடிக்க வேண்டும். அதற்கான நேரத்தை அவர்தான் சரிசெய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதை விட்டு விட்டு கோவைக்கு வந்து விட்டு மீண்டும் பொள்ளாச்சி சென்றால் அது வேண்டாத வேலை தான்.
பல நேரங்களில் இப்படிச் செய்து விட்டு, திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி = திரு திரு’ என்று விழிக்கின்றவர் பலபேர் நம்மிடையே உண்டு.
வளரும் சிகரங்கள் அமைப்பில் குழந்தைகளு க்கிடையே நடைபெற்ற ஓர் ஓவிய அரங்கில் ஒரு குழந்தை மீன் வரைந்தி ருந்தது.
அருகிலி ருந்த மற்றொரு குழந்தை சொன்னது, ”இந்த மீன் நீந்துவது மாதிரி இல்லை. பறக்கிற மாதிரி இருக்கு! அப்படின்னா இது என்ன மீன் தெரியுமா? விண்மீன்!!
அருகிலி ருந்த மற்றொரு குழந்தை சொன்னது, ”இந்த மீன் நீந்துவது மாதிரி இல்லை. பறக்கிற மாதிரி இருக்கு! அப்படின்னா இது என்ன மீன் தெரியுமா? விண்மீன்!!
ஆற்று மீனை விண்மீனாக மாற்ற பள்ளிக் குழந்தைக்கு தெரிந்தி ருக்கிறது என்றால் நமக்கு மீன்பிடிக்க அல்லவா தெரிந்திருக்க வேண்டும்!
நல்ல தொழிலை லாபத்துடன் செய்து கொண்டே அந்த தொழில் சார்ந்த உபரி தொழில் களையும் செய்து தொழில் வல்லுனர் ஆவது புத்திசாலித் தனம்.
மீன் கொத்திப் பறவை களையும் கொக்கையும் ஒப்பிட்டுப் பாருங்களேன். = ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை ஒற்றைக் காலில் நின்று கொண்டு நேரத்தை வீணடிக்கும் கொக்கு.
ஆனால் ஓடுகின்ற ஆற்றின்மேல் லாவகமாய் பறந்து கொண்டே ஆற்றில் துள்ளிக் குதிக்கின்ற மீனை டக்கென்று பிடித்துக் கொண்டு மீண்டும் பறக்கின்ற மீன் கொத்திப் பறவை.
இதில் எது சரி? பறந்து கொண்டே மீன் பிடிப்பது தானே! எதிரில் நிற்பவர் எல்லாம் என் உறவினர்.
நான் போர் செய்ய மாட்டேன் என்று சும்மா நின்ற அர்ஜுனனுக்கு உபதேசம் செய்து உலகிற்கு கீதையை தரமுடிந்தது கிருஷ்ணனால்.
எப்படி? போதி மரத்தடியில் அல்ல! ஐந்து குதிரைகளின் கடிவாளம் ஒரு கையில்! நிற்கின்ற இடமோ போர்க்களம்! மனதளவில் பலமுனைத் தாக்குதல்.
என்ன தான் கடவுள் என்று நாம் சொன்னாலும் (நினைத்தாலும்) கூட போர்க்களத்தில் கீதையைத் தர கிருஷ்ணனுக்கு தேவைப் பட்டது இரண்டு.
1) இன்று இது இப்பொழுது தேவை என்கின்ற மனம்.
2) மிகச்சரியான ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என்கின்ற தெளிவு!
இவை இரண்டும் போர்க் களத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக் களத்திற்கும் தேவை.
ஒன்றிலிருந்து கொண்டு மற்றொன்றில் நிலைத்த தன்மை பெறுவது தான் இன்றைய கால கட்டத்திற்கு தேவையான ஒன்று. மளிகைக்கு ஒரு கடை, காய்களுக்கு ஒரு கடை,
பாத்திரங்களுக்கு ஒன்று; செருப்புக்கு ஒன்று; = நாவல்டீஸி’ற்கு ஒரு கடை, அழகு சாதனங்களுக்கு ஒரு கடை என்று அலைகின்ற போது அய்யோடா என்று இருந்த ”ஷாப்பிங்…
அனைத்தும் ஒரு கூரையின் கீழ் டிபார்ட்மெண்ட் ஸ்டோராக வந்த போது பயனடைந்தது வாடிக்கையாளர், கடை முதலாளி, தொழிலாளி மூவரும் தான்.
முதலில் தரம் வாரியாக பஞ்சை மட்டும் பிரிக்கின்ற நிறுவனம் பின்னாளில் பஞ்சிலிருந்து நூல்; நூலிலிருந்து தரம் வாரியான துணிகள்.
பின் சந்தைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் ஆடைகள், அதன்பின் ஆயத்த ஆடைகள். அடுத்த கட்டமாக ஏற்றுமதி, நிறைவாக மக்களிடையே நேரடி சந்தைப் படுத்துதல். சந்தைப் படுத்துதலில் புதுப்புது உத்திகள்!
இன்றைய பிரபல அனைத்து டெக்ஸ்டைல்ஸ் நிறுவன ங்களும் இப்படித் தான்!
முழு நேரமும் எல்.ஐ.சி. முகவராக இருக்கின்ற ஒருவர் கிடைக்கின்ற வேலை நேரத்தில் ரியல் எஸ்டேட் ஒரு கை என்று இருந்தார் என்றால் அவருக்கு லட்சுமி கடாட்சம் அமோகம் தான்.
ஏனெனில் இரண்டுக்கும் வாய் ஒன்று தான் முதலீடு. வாய் இருந்தால் வருவாய்க்கு ஏது பஞ்சம். தனித்தனி நேரம் தேவை யில்லை, தங்கள் பயனாளி களைப் பார்க்க! ஒரே நேரத்தில் இரண்டு காரியமும் ஆகும்.
முதலில் தரம் வாரியாக பஞ்சை மட்டும் பிரிக்கின்ற நிறுவனம் பின்னாளில் பஞ்சிலிருந்து நூல்; நூலிலிருந்து தரம் வாரியான துணிகள்.
பின் சந்தைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் ஆடைகள், அதன்பின் ஆயத்த ஆடைகள். அடுத்த கட்டமாக ஏற்றுமதி, நிறைவாக மக்களிடையே நேரடி சந்தைப் படுத்துதல். சந்தைப் படுத்துதலில் புதுப்புது உத்திகள்!
இன்றைய பிரபல அனைத்து டெக்ஸ்டைல்ஸ் நிறுவன ங்களும் இப்படித் தான்!
இதுதான் ஒன்றி லிருந்து கொண்டு இன்னொன்று! பறந்து கொண்டே மீன் பிடிக்கத் தேவை காட்சிப் பிரமாணமும் மற்றொன்று அனுமானப் பிரமாணமும்.
பார்க்கின்ற காட்சியை புரிந்து கொள்ள வேண்டும். எது இருக்கிறது என்று அனுமானிக்கத் தெரிய வேண்டும்.
புகை இருக்கின்றது என்றால் நெருப்பு இருக்கும் என்று அனுமானி க்கும் அறிவும், புரிதலும் இருந்தால் அந்த நெருப்பு நமக்கு பயன்படவும் செய்யும்.
செயல்தி றனை வளர்த்துக் கொண்டால் சுற்றும்பூமி நம் கையில் தான். பறந்து கொண்டே மீன் என்ன? திமிங்கலமும் பிடிக்கலாம் !