சென்னை ஸ்ரீமுத்துக்குமரன் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மின்னியல் துறை மாணவர்கள் ஹெல்மெட் அணிந்தால் தான் ஸ்டார்ட் ஆகும் மோட்டார் பைக்கைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்ரீமுத்துக் குமரன் பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகள் கண்காட்சித் துவக்க விழா திங்கள் கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை மேற்கு மண்டல போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையர் எஸ்.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்துப் பார்வை யிட்டார்.
கண் காட்சியில் மின்னியல், மின்னணுவியல் துறை மாணவர்கள் கே.புஷ்பராஜ், பி.ராஜசேகர், பி.பொன்விஜெய், எஸ்.பார்த்திபன்
ஆகிய 4 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய ஹெல்மெட் அணிந்தால் ஸ்டார்ட் ஆகும் மோட்டார் பைக் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
ஆகிய 4 மாணவர்கள் இணைந்து உருவாக்கிய ஹெல்மெட் அணிந்தால் ஸ்டார்ட் ஆகும் மோட்டார் பைக் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
போக்கு வரத்துத் துறை ஆணையர் எஸ்.பன்னீர் செல்வம் மாணவர்களிடம் பைக் செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் பேசும் போது, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இருசக்கர வாகன விபத்துகளைத் தடுக்கும் வகையில்,
ஹெல்மெட் அணிவதை கட்டாய மாக்கும் இந்த நவீன தொழில் நுட்பத்தை உருவாக்கி இருக்கும் மாணவர்களை பெரிதும் பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன்.

இந்த வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது ஏதேனும் விபத்து, அசம்பாவிதம் நேர்ந்து விட்டால் உடனடியாக ஆம்புலன்ஸ்,
மற்றும் காவல் துறையின ருக்குத் தகவல் கிடைக்கும் வகையில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டு இருப்பதும் சிறப்பு அம்சம்.
பெட்ரோல் பயன் படுத்துவதைத் தவிர்த்து சூரியசக்தி மூலம் பைக்கை இயக்கும் தொழில் நுட்பமும்
மேம்படுத் தப்பட்டு இருப்பதால் இதை மிகச்சிறந்த கண்டு பிடிப்பாகக் கருதுகிறேன் என்றார் அவர்..
பெட்ரோல் பயன் படுத்துவதைத் தவிர்த்து சூரியசக்தி மூலம் பைக்கை இயக்கும் தொழில் நுட்பமும்
மேம்படுத் தப்பட்டு இருப்பதால் இதை மிகச்சிறந்த கண்டு பிடிப்பாகக் கருதுகிறேன் என்றார் அவர்..
வாகனப் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்றாற் போல சிக்னலைக் கட்டுப் படுத்தும் தானியங்கி சிக்னல்,
வீட்டுப் பாதுகாப்புக் கான தானியங்கி பாதுகாப்பு சாதனம் உள்ளிட்ட பல்வேறு கண்டு பிடிப்புகள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.
வீட்டுப் பாதுகாப்புக் கான தானியங்கி பாதுகாப்பு சாதனம் உள்ளிட்ட பல்வேறு கண்டு பிடிப்புகள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.
கண்காட்சி யில் கல்லூரி முதல்வர் ஆர்.எம். சுரேஷ், நிர்வாக அலுவலர் வீரராகவன், ஒருங்கிணைப்பு அலுவலர் எம்.ஆர். வெங்கடேசன், மின்னணு,
தகவல் தொழில் நுட்பத்துறைத் தலைவர் சாந்தி செல்லையா, மின்னியல், மின்னணுவியல் துறைத் தலைவர் ஜி.ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தகவல் தொழில் நுட்பத்துறைத் தலைவர் சாந்தி செல்லையா, மின்னியல், மின்னணுவியல் துறைத் தலைவர் ஜி.ஜானகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.