பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு சர்ச்சைக்குள்ளான ஆஷாகுமாரி, அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள டல்ஹவுசி தொகுதி எம்எல்ஏ வான ஆஷாகுமாரியை கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளராக காங்கிரஸ் மேலிடம் ஞாயிற்றுக் கிழமையன்று நியமித்தது.
ஏற் கெனவே இப்பதவியில் இருந்த கமல்நாத், சீக்கியர்களுக்கு எதிரான கலவர விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளானதால் பதவி விலகினார்.
கமல்நாத்துக்கு பதிலான ஆஷாகுமாரியை கட்சி மேலிடம் நியமித்தது. ஆனால், ஆஷாகுமாரி 4 முறை எம்எல்ஏவாகவும்,
கடந்த ஐமு கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தா லும், நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் குற்றம்நிரூபிக்கப்பட்டு, ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டவர்.
ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதி மன்றம் தண்டனைக்கு தடை விதித்தாலும், ஜாமீனில் வெளி வந்துள்ள ஒருவரை மாநில பொறுப் பாளராக நியமித்தது பஞ்சாப் காங்கிரஸில் அதிருப்தி அலையை எழுப்பியுள்ளது.
இன்னும் ஓராண் டில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், கறைபடிந்த ஒருவரை பொறுப்பா ளராக நியமித்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் கட்சித் தலைவர் சோனியா காந்தியை, ஆஷாகுமாரி நேற்று சந்தித்துப் பேசினார். தனது நியமனம் தொடர்பான சர்ச்சை குறித்து சோனியாவிடம் ஆஷா விளக்கம் அளித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதோடு, கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளராக ஆஷா குமாரி தொடர்ந்து நீடிப்பார் என்றும், ஹரியாணா மாநிலத்துக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் பதவியை வேண்டு மானால் அவர் துறக்க வாய்ப் புள்ளது’ என, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.