இரண்டு வருட இடைவெளி ஏன்? இலியானா !

1 minute read
சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு அக்‌ஷய் குமாரின் 'ரஸ்டம்' படத்தின் மூலம் திரும்பவும் வெள்ளித் திரைக்கு வரும் நடிகை இலியானா. 
இரண்டு வருட இடைவெளி ஏன்? இலியானா !
திரைப்படங்களில் நடிப்பதை வேண்டுமென்றே தவிர்க்கவில்லை என்று கூறியிருக்கிறார். சயிஃப் அலி கானுடன் 2014-ல் 'ஹேப்பி எண்டிங்' படத்தில் கடைசியாக நடித்த இலியானா,

ஒரே மாதிரியாக நடிப்பது எனக்கு போரடிக்கிறது. இது வழக்கமான பதிலாக இருக்கலாம், ஆனால் இந்த நிலை எனக்கு பிடிக்கவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் 

எனக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களில் திருப்தி இல்லை. அரை மனதோடு நடிப்பதைக் காட்டிலும் நடிக்காமலே இருக்கலாம் என்று தோன்றுகிறது" என்று கூறியிருந்தார்.
இப்போது, "வெள்ளித்திரையில் இத்தனை நாட்களாக படங்களில் நடிப்பதை வேண்டுமென்றே தவிர்க்க வில்லை. கமர்ஷியல் படங்களில் நடிப்பதும், 

ஆணில் பின்னால் சுற்றும் பெண் பாத்திரத்தில் நடிப்பதும் எனக்கு ஓகே தான். ஆனால் ஒரு கட்டத்தில் அதே மாதிரியான படங்களில் நடித்து போரடித்து விட்டது.

என்னை உண்மையாக சந்தோஷப் படுத்தக் கூடிய படங்களில் நடிப்பதையே விரும்பினேன்; விரும்புகிறேன். ரஸ்டம் அத்தகைய ஒரு படம்தான்" என்று கூறியிருக்கிறார் இலியானா.
'ரஸ்டம்' திரைப்படம் கடற்படை அதிகாரி ஒருவரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்டுள்ளது. டினு சுரேஷ் தேசாயின் இயக்கத்தில் இப்படம் ஆகஸ்ட் 12-ல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings