ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அரசு ஊழியர்களை ஏற்றிச் சென்றதாக கருதப்படும் மினிபஸ் மீது இன்று தீவிரவாதிகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில்
பலர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காபுல்-ஜலாலாபாத் சாலையில் இன்று காலை அரசு ஊழியர்களை ஏற்றிச் சென்றதாக கருதப்படும் மஞ்சள்நிற மினிபஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவ இடத்துக்கு போலீசாரும், இருபதுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்ததாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
குண்டுவெடிப்பில் சேதமடைந்த வேனில் இருந்து பல உடல்கள் உருக்குலைந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் நோன்பின்போது நடந்துள்ள இந்த தாக்குதல் அங்குள்ள தீவிரவாதிகளின் மூர்க்கத்தனத்துக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.