பிரித்தானியாவில் பின்னழகை பெரிதாக்க முயன்ற நடன மங்கை கிளாடியா என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.பிரித்தானியாவை சேர்ந்த நடன மங்கை கிளாடியா அகெடரோடிமி (Claudia Aderotimi age – 20) என்பவர்,
தனது பின்னழகை பெரிதாக்கி ஏராளமான ரசிகர்களை கவர முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, இதற்காக சிறப்பு சிகிச்சை அளிக்கும் விக்டோரியா விண்ட்ஸ்லோவோ (Victoria Windslowe’s) என்ற பெண்ணை நாடியுள்ளார்.
இவர் கிளாடியாவின் இடுப்பு பகுதியில் சிலிக்கான் மெத்தைகளை வைத்து தைத்தும், சில ரகசிய மருந்துகள் கொண்ட ஊசிகளை போட்டும் சிகிச்சை அளித்து, அவரது பின்னழகை ஓரளவுக்கு பெரிதுப்படுத்தி காட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு, தனது பிறந்த நாள் விழாவுக்கு புறப்படும் முன்னர் கிளாடியா அடெரோடிமி மருந்துகளின் வீரியத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இவரது மரணத்துக்கு பாட்கே விக்டோரியா விண்ட்ஸ்லோவே செய்த தவறான சிகிச்சைதான் காரணம் என்றும் உரிமம் இல்லாமல் சிகிச்சை அளித்து வந்த குற்றத்திற்காகவும் அவர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர் பிரபல ராப் இசைப் பாடகி ஆவார். கிளாடியா அடெரோடிமியின் பிரேதத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இடுப்பு பகுதியில் பதிக்கப்பட்ட விலை மலிவான-
தரம் குறைந்த சிலிக்கானில் இருந்த நச்சுப் பொருட்கள் அவரது இதயம் மற்றும் மூளைப்பகுதியை தாக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அறிக்கை அளித்துள்ளனர்.
இந்த வழக்கில் கொலை குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ள பாட்கே விக்டோரியா விண்ட்ஸ்லோவே மீதான விசாரணை விரைவில் தொடங்கப்படவுள்ளது.