இந்­தோ­னே­ஷிய பெண்­க­ள் முத­லா­ளியின் வீட்டில் தங்­கி­­யி­ருந்து பணி புரிய தடை !

இந்­தோ­னே­ஷிய மக்கள் வெளி­நா­டு­களில் முத­லா­ளியின் வீட்டில் தங்கி பணிப்­பெண்­ணாக வேலை செய்­­வது அடுத்த வருடம் முதல் தடை செய்யப்­படும் என்று அந் நாட்டு அரசு தெரி­வித்­துள்­ளது.
ஆனால் அவர்கள் முத­லா­ளியின் வீடு­களில் தங்­காமல், தனி­யாக தங்­கி­யி­ருந்து, முறை­யான வேலை நேரம், உத்­த­ர­வாதம் செய்­யப்­பட்ட வார விடு­முறை போன்­றவை இருந்தால் வேலை செய்ய அனு­ம­திக்­கப்­ப­டலாம் என்றும் சொல்­லப்­ப­டு­கி­றது.

இது குறித்து இந்­தோ­னே­ஷிய அதி­கா­ரிகள், வீட்டு வேலை செய்யும் தொழி­லா­ளர்­களை பாது­காக்கும் எண்­ணத்­தோடு இந்த திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­த­ப்படவுள்­ள­தா­கவும், இது நீண்ட நாட்­க­ளாக நிலு­வையில் இருந்­தது என்றும் கூறி­யுள்ளார்.

பணி­யா­ளாக இலட்­சக்­க­ணக்­கான இந்­தோ­னே­சி­யர்கள் கிழக்கு ஆசியா மற்றும் மத்­திய கிழக்கு பகு­தி­களில் வேலை செய்து வரு­கின்­றனர். அவர்­களில் பலர் அவர்­க­ளது முத­லா­ளி­களின் வீடுகளில் தங்கியிருந்து பணி புரிந்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­­து.
Tags:
Privacy and cookie settings