நாம் அனைவரும் அறிந்ததைப் போல் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது. இதற்காகப் பிரிட்டன் நாட்டு மக்களிடம்
ஜூன் 23ஆம் தேதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் முழுமையான ஆதரவும் அளித்துள்ளனர்.
இந்நிலையில் ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகிவிட்டது. சரி ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறினால்
ஆசிய சந்தையில் இருக்கும் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகளையே நாம் இப்போதும் பார்க்கப்போகிறோம்.
ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் இருந்து இரு தரப்பு மத்தியிலும் மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் பொருளாதார இடைவேளி உருவாகும்.
இவை அனைத்தையும் தாண்டி இரு தரப்பு மத்தியிலும் எல்லை பிரச்சனை, புலம்பெயர்ந்தவர்கள் நலன், பாதுகாப்பு போன்ற பல பிரச்சனைகள் உருவாகும்.
இந்நிலையில் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் நாட்டிற்குச் சாதகமாக அமைந்துள்ளது. இதனால் ஐரோப்பா சந்தையின் ஜிபிடி அளவில் சுமார் 2-7 சதவீதம் பாதிக்கும்.
இல்லை என்றால் ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியன் (பிரிட்டன் நாட்டையும் சேர்ந்து) சந்தையின் ஜிடிபி அளவு 2030ஆம் ஆண்டுக்குள் 1.6 சதவீதம் அதிகரிக்கும் எனக் கணிப்பட்டுள்ளது. சரி இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகளை இப்போது பார்ப்போம்.
முதலில் நாணய பரிமாற்றத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருந்து இந்திய சந்தையில் செய்யப்படும் முதலீட்டு அளவுகள் கடுமையாகப் பாதிக்கும்.
யூரோ மற்றும் பவுன்ட் இரு நாணயங்களில் ஏற்படும் பாதிப்புகள் இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சீர்குலைக்கும். இந்திய நாட்டிற்கு ஐரோப்பிய சந்தையும், சரி பிரிட்டன் சந்தையும் சரி மிகப்பெரிய வர்த்தகத் தளம் என்பதை நாம் மறந்து விடமுடியாது.
பிரிட்டன் நாட்டில் மட்டும் சுமார் 800 இந்தியர்கள் தங்களது வர்த்தகத்தைச் செய்து வருகின்றனர். இந்நிறுவனங்களில் சுமார் 1,10,000 பேர் பணி யாற்றுகின்றனர்.
இப்பிரிவினையால் பிரிட்டன், ஐரோப்பிய சந்தையில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய சந்தை சார்ந்த அனைத்து வர்த்தகமும் கடுமையாகப் பாதிக்கும்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் விலையும் அதிகமாக இருக்கும். இதனால் பணவீக்கம் அதிகரித்துப் பவுன்ட் நாணயத்தின் மதிப்பு 15-20 சதவீதம் வரை கடுமையாகப் பாதிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவினை இந்தியாவிற்குக் கச்சா எண்ணெய் விலை மாற்றும், பெடர்ல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு விடவும் மிகப்பெரிய பிரச்சனையாகும்.
ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் இந்திய வர்த்தக சந்தை மிகப்பெரிய வர்த்தக சரிவை எதிர்கொள்ளும்.
இதனுடன் அன்னிய முதலீட்டில் வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய பின்னைடவு ஏற்படும்.
பிரிட்டன் நாட்டில் வர்த்தக வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளதால் ஐரோப்பிய யூனியனில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ரோமாணிய போன்ற பல நாடுகளில் இருந்து பிரிட்டன் நாட்டிற்குப் புலம்பெயர்கின்றனர்.
இதனால் பிரிட்டன் நாட்டில் வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் அதிகளவில் குறைந்து வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு தான் பிரிட்டன் பிரிவிற்கு அடித்தளத்தைப் போடுகிறது. பார்ப்போம் ஜூன் 23 ஆம் தேதி.