குடும்பத்தார் விரட்டி விட்டதால் பாலிவுட் நடிகை அலிஷா கான் டெல்லியில் சாலையோரம் வசித்து வருகிறார். உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் அலிஷா கான். மாடல், பாலிவுட் நடிகை.
அவர் இம்ரான் ஹஷ்மியுடன் சேர்ந்து ஆய்னா என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக உள்ளது.
மேலும் அவர் அண்மையில் ரிலீஸான மை ஹஸ்பன்ட்ஸ் ஒயிப் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். இது தவிர பல இசை வீடியோக்களிலும் தோன்றியுள்ளார்.
இந்நிலையில் அவரது முன்னாள் காதலர் அவர்கள் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து அதில் ஒரு வீடியோவை இணைய தளத்தில் வெளியிட்டார்.
மேலும் மீதமுள்ள வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டினார். இதையடுத்து அலிஷா தனது முன்னாள் காதலர் மீது போலீசில் புகார் அளித்தார்.
அதன் பிறகு இணைய தளத்தில் இருந்த அந்த கசமுசா வீடியோ அகற்றப்பட்டது.
அலிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்து, அவரது அந்தரங்க வீடியோ வெளியானது ஆகியவற்றால் கோபம் அடைந்த அவரது தாயும், சகோதரரும் அவரை வீட்டை விட்டு விரட்டிவிட்டனர்.
இதையடுத்து அலிஷா டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் வசித்து வருகிறார். இரவு நேரத்தில் சாலையோரம் அல்லது கோவில்களில் படுத்து தூங்குகிறார்.