ஜனநாயகக் கட்சி வேட்பாளரை கொல்ல முயன்ற இளைஞர் கைது !

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை கொல்வதற்காக போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை எடுக்க சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் வரும் நவம்பர் மாதம் எட்டாம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப்புடன் குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் மோதுகிறார்.

இந்நிலையில், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் பிரச்சார நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். 

அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை உருவி டொனால்ட் டிரம்ப்பை கொல்லப் பாய்ந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான இளைஞரின் பெயர் மைக்கேல் சான்ட்போர்ட்(19) என்றும் அவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

டிரம்ப்பை சுட்டுக் கொல்லும் திட்டத்துடன் 18 மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த மைக்கேல், நியூ ஜெர்சி, கலிபோர்னியா ஆகிய பகுதிகளில் வசித்து வந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக மைக்கேல் சான்ட்போர்ட் மீது நிவேடா கோர்ட்டில் கொலை முயற்சி வழக்கு பதிவு போலீசார் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings