தன் மனைவி குளிப்பதை படம் எடுத்தவருக்கு கிடைத்த தண்டனை !

மனைவி குளிப்பதை படமெடுத்து மிரட்டிய நபரொருவரை கணவனும் , மனைவியும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விபரம் வருமாறு:

சென்னை ராயபுரம் பகுதியில் வசித்து வந்தவர் அன்பு. கப்பலில் பணி புரிவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி நந்தினி.

அதே பகுதியில் பாட்டி வீட்டில் வசித்து வந்தவர் கவாஸ்கர் (29). திருமணம் ஆகாத

இவர் புதுவை கிருமாம் பாக்கத்தை அடுத்துள்ள பனித்திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்.

சிறு வயதிலேயே தாயை இழந்ததால் ராயபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார்.

அப்போது அன்புவின் குடும்பத்தி னருடன் நெருங்கி பழகினார். வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்.

அப்போது நந்தினி குளிக்கும் காட்சியை கவாஸ்கர் ரகசியமாக தனது செல் போனில் பதிவு செய்தார்.

இதனை நந்தினியிடம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி கணவர் அன்புவிடம் முறையிட்டார்.

இதை தொடர்ந்து அன்புவும், அவரது உறவினர் களும், கவாஸ்கரை எச்சரித்து சென்னையில் இருந்து விரட்டி விட்டனர்.

பின்னர் புதுவைக்கு திரும்பிய கவாஸ்கர் ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது நந்தினியின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை தொடங்கி அவரது ஆபாச குளியல் காட்சிகளை பரவவிட்டார். 

இதுபற்றி தெரிய வந்ததும் மேலும் ஆத்திரம் அடைந்த அன்பு, கவாஸ்கரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார்.

இதையடுத்து அன்பு, தனது மனைவி நந்தினியுடன் சென்னையில் இருந்து புதுவைக்கு காரில் சென்றார். அவர்களுடன், ராயபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், புகழேந்தி ஆகியோரும் சென்றனர்.

கவாஸ்கர் வேலை செய்யும் ஓட்டலுக்கு சென்று அவரிடம் நைசாக பேசிய அன்புவும், நந்தினியும் வெளியில் செல்லலாம் என கூறி அழைத்துச் சென்றனர்.

பின்னர் காருக்குள் வைத்தே நந்தினியின் ஆபாச படத்தை இணைய தளததில் ஏன் வெளியிட்டாய்? என கேட்டு கவாஸ்கரிடம் தகராறில் ஈடுபட்டனர். காருக்குள் வைத்தே அவரை சரமாரியாக தாக்கினர்.

பின்னர் கார் புதுவையில் இருந்து மகாபலிபுரம் நோக்கி சீறிப் பாய்ந்தது. மகாபலிபுரத்தில் பட்டிப்புலம் என்ற பகுதியில் மறைவான இடத்துக்கு கார் சென்றது. பின்னர் காரில் இருந்து கவாஸ்கரை கீழே இறக்கினர்.

அவரது கழுத்தில் சுறுக்கு கயிற்றை கட்டி மரத்தில் கட்டி தொங்க விட்டனர். இதில் கவாஸ்கர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

கவாஸ்கர் காணாமல் போனதை அறிந்து அவரது உறவினர்கள் புதுவை பொலிஸில் புகார் அளித்தனர். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கவாஸ்கர் சென்னை ராயபுரத்தில் வசித்து வந்தது தெரிய வந்தது.

அதே பகுதியில் வசித்த அன்பு மற்றும் நந்தினி ஆகியோர் புதுவைக்கு வந்து கவாஸ்கரை காரில் அழைத்துச் சென்றதையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அன்புவை தேடிக்கண்டு பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கவாஸ்கரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவரது நண்பரான கார்த்திக்கும் கைதானார்.

தன்னை படம் எடுத்தவரை பழி தீர்க்கும் நோக்கத்தில் அன்புவின் மனைவி நந்தினியும் இக்கொலைச் சம்பவத்தின் போது உடன் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் கவாஸ்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கணவர் அன்பு கைது செய்யப்பட்டதை அறிந்ததும், நந்தினி தப்பி ஓடி தலை மறைவாகி விட்டார். 

அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தலைமறைவாக இருக்கும் புகழேந்தியையும் பொலிஸார் தேடி வருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings