“நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும்.
உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)
பொதுவாகவே - கணவன் சாப்பிட்ட பின்னரே மனைவி சாப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இது தேவையில்லை! இதிலும் சுன்னத்தையும் கடைபிடிக்கலாம் தானே?