பெல்ஜியம் நாட்டில் வானில் சமைத்து அந்தரத்திலேயே விருந்து !

பெல்ஜியம் நாட்டின் பிரசில்ஸ் நகரில் 164 அடி உயரத்தில் சமைத்து விருந்து படைக்கும் அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது. பிரசில்ஸ் நகரின் 10-வது ஆண்டாக வானில் விருந்து
என்ற பெயரில் அந்தரத்தில் விருந்து கொடுத்து விருந்தினர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர்.

164 அடி உயரத்தில் செல்லும் இயந்திரத்தில் விருந்தினர்கள் அமர்ந்த உடன் மேஜை அவர்கள் முன் தானாக எழும்பும் படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உயர்தர சமையல் நிபுணர்கள் அந்த இடத்திலேயே சமைத்து விருந்தினர்களுக்கு உற்சாகமாக உணவுகளை பரிமாறினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவருக்கு ரூ.2 லட்சம் ஏற்பாட்டாளர்களால் வசூலிக்கப்பட்டது.

விருந்தில் கலந்து கொள்ள ஏராளமானோர் ஆர்வமாக இருப்பதால் வானில் விருந்து கொடுப்பதை பல நாடுகளுக்கு விரிவாக்கவும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings