குழந்தை தலை சிறியதாக பிறக்க ஜிகா வைரஸ் காரணமில்லை !

சிறிய தலையுடன் குழந்தை பிறப்பதற்கு ஜிகா வைரஸ் தான் காரணம் என்பதற்கு எந்தவித உறுதியான ஆதாரங்களும் கண்டறியப்பட வில்லை என்று கொலம்பியா அதிபர் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து கொலம்பியா அதிபர் ஜூவான் மானுவேல் சான்டோஸ் கூறும் போது, ''கொலம்பியாவில் 25,600-க்கும் மேற்பட்டோர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சிறிய தலையுடன் குழந்தை பிறப்பதற்கு ஜிகா வைரஸ்தான் காரணம் என்பதை உறுதி செய்யப் போதுமான ஆதாரங்கள் இல்லை.

மேலும், சிறிய தலையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஜிகா வைரஸ்தான் காரணம் என்று பிரேசில் அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்து இருந்தனர். 

இதை தொடர்ந்து, பரிசோதனை நடத்த அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் குழு கடந்த சனிக்கிழமை கொலம்பியா வந்தது.

அந்த குழு, கொலம்பியாவில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட 3,177 கர்ப்பிணிப் பெண்களிடம் பரிசோதனை நடத்தியது. 

பரிசோதனை முடிவில், சிறிய தலையுடன் குழந்தை பிறப்பதற்கும், ஜிகா வைரஸுக்கும் தொடர்பில்லை என கண்டறியப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.
Tags:
Privacy and cookie settings