விஷால் மன்னிப்பு கோர வேண்டும்.. வீர விளையாட்டு கழகம் !

1 minute read
ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் தெரிவித்துள்ளது.
விஷால் மன்னிப்பு கோர வேண்டும்.. வீர விளையாட்டு கழகம் !
இது தொடர்பாக தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழக ஒருங்கி ணைப்பாளர் டி.ராஜேஷின் அறிக்கை: 

விலங்குகள் நல அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது வரவேற்கத் தக்கது என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வசித்துக் கொண்டு, தமிழ்ப் படங்களில் நடித் துச் சம்பாதிக்கும் விஷால், தமிழ்க் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் அந்தக் கருத்தைக் கூறி யது, தமிழ்ச் சமூகத்தை இழிவு படுத்தும் செயல். 

அவர் தனது கருத்தை திரும்பப் பெறுவதுடன், மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லை யெனில், விஷாலின் திரைப்படம் வெளியாகும் திரை யரங்குகளில் போராட்டம் நடத்து வோம். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஜேஷிடம் கேட்ட போது, ஜல்லிக்கட்டு தடை தொடர்பான தனது கருத்துக்கு நடிகர் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும். 

இல்லை யெனில், அவரது உருவ பொம்மை எரிப்பு உட்பட தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றார்.
Tags:
Today | 19, March 2025
Privacy and cookie settings