உடல் நலமில்லாத குழந்தைக்கு இந்திய ரெயில்வே உதவியது எப்படி?

மராட்டியத்தில் உடல்நிலை சரியில்லாத தனது மகனுக்கு இந்திய ரெயில்வே உதவிசெய்தது தொடர்பான தந்தையின் தகவல் பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.
மத்தியில் ரெயில்வே மந்திரியாக சுரேஷ் பிரபு பதவியேற்ற பின்னர் வியக்கத்தகு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ரெயில்வே தொடர்பான தகவல்களை டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவதிலும், கருத்துக்களை பெருவதிலும் முன்னுரிமை கொடுக்கிறார்.

ரெயில்வே பயணிகளுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட சேவைகளை திறன்பட, உடனடியாக வழங்குவதிலும் தனி கவனம் செலுத்திவருகிறார்.

இதில் புதிய செய்தியாகி உள்ளது உடல்நிலை சரியில்லாமல் இருந்த குழந்தைக்கு ரெயில்வே உதவியது தொடர்பான தந்தையின் நன்றி கலந்த பேஸ்புக் பதிவு.

மினாகேட்டன் பதி என்பவர் தன்னுடைய அனுபவத்தை பேஸ்புக் பகுதியில் வெளியிட்டு உள்ளார். அவரது செய்தியை 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பகிர்ந்துக் கொண்டு உள்ளனர்.

கடந்த மே மாதம் 27-ம் தேதி நான் (மினாகேட்டன் பதி) என்னுடைய குடும்பத்துடன் மும்பையில் இருந்து சீரடிக்கு பாஸ்ட் பேசஞ்சர் ரெயிலில் (51033) பயணம் செய்தோம்.

ரெயில் சென்றுக் கொண்டிருந்த போது என்னுடைய மூன்றரை வயது குழந்தைக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. குழந்தையின் உடல்நிலையானது மோசாமாகி கொண்டு இருந்து உள்ளது.

உடனடியாக காலை 7 மணியளவில் டிடிஇ-யிடம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக டிடிஇ அடுத்த ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து ரெயில் வேகமாக இயக்கப்பட்டது.

ரெயில் அடுத்த ரெயில் நிலையத்தை சுமார் 20 நிமிடங்களில் அடைந்தது. ரெயில் நிலையத்தை அடையவேண்டிய நேரத்திற்கு முன்னதாகவே சென்றடைந்தது.

ரெயில் சென்று அங்கு போலீஸ் மற்றும் மருத்துவ உதவியாளார்கள் மற்றும் ரெயில்வே பணியாளர்கள் காத்திருந்தது அதிர்ச்சியடைய செய்தது. குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் நிலையத்திற்கு வெளியே ஆம்புலன்சும் நிறுத்தப்பட்டு இருந்தது. உடனடியாக குழந்தை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குழந்தைக்கு சுமார் 10 நிமிடங்களுக்குள் சிகிச்சை அளிக்கப்பட்டது, அன்று மாலையே என் குழந்தையின் உடல் நலமடைந்தது என்று மினாகேட்டன் பதி கூறிஉள்ளார்.

முழு தகவலையும் வெளியிட்டு உள்ள அவர் ரெயில் டிடிஇ, அகமத்நகர் ரெயில்நிலைய அதிகாரி மற்றும் ரெயில்வே மந்திரிக்கு அவர்களுடைய உதவிக்கு நன்றியை தெரிவித்து உள்ளார்.
Tags:
Privacy and cookie settings