வளைகுடா நாடுகளில் புனித ரமலான் நோன்பு இன்று துவங்கியுள்ளது. நாளை முதல் இந்தியாவில் ரமலான் நோன்பு வைக்கப்படும். ஆண்டுதோறும் புனித ரமலான் மாதத்தில் உலக முஸ்லீம்கள் நோன்பு இருப்பது வழக்கம்.
பிறை தெரிவதை வைத்து தான் ரமலான் மாதம் துவங்கும். இந்நிலையில் வளைகுடா நாடுகளில் நேற்று இரவு பிறை தெரிந்ததால் நேற்றுடன் ஷாபான் மாதம் முடிந்து இன்று ரமலான் மாதம் துவங்கியுள்ளது.
இதையடுத்து வளைகுடா நாடுகளில் வசிக்கும் முஸ்லீம்கள் இன்று காலை சஹர் செய்து புனித ரமலான் நோன்பை துவங்கியுள்ளனர். இந்தியாவில் நாளை ரமலான் நோன்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நோன்பையொட்டி அமீரகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிநேரம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள் தங்களின் பணிநேரத்தை 2 மணிநேரம் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு பள்ளி தேர்வுகள் நேரத்தில் ரமலான் நோன்பு வந்துள்ளது.