ஸகாத்துல் பித்ர் !

ரமளான் மாதம் முடிந்து ஷவ்வால் பிறை பிறந்ததும் பெருநாள் தொழுகைக்கு முன் ஏழைகளுக்கு வினியோகிக்க வேண்டிய தர்மமே ஸகாத்துல் பித்ர் (ஏழைகளின் பசி போக்கும் தர்மம்) எனப்படும்.
ரமளான் நோன்பிலே நிகழுந்துள்ள தவறுகள் குறைகளுக்கு பரிகாரமாகவும், நம்மையறியாமல் வெளிவந்த வார்த்தைகளாலோ, நிகழ்ந்துவிட்ட செயல்களாலோ பிறரைக் காயப்படுத்தியிருந்தால் அதைப் போக்கும் அருமருந்தாகவும்,

ரமளானைப் பெற்று புனித நோன்பை நோற்று வணக்கவழிபாடுகள் புரியும் பெரும் பேறை நல்கிய நாயனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அளிக்கப்படட மகத்தான வாய்ப்பே இந்த ஈதுல் பித்ர் என்னும் தர்மமாகும்.

யார் மீது கடமை ?

பெருநாள் செலவுக்கு வசதி பெற்ற சுதந்திரமான ஆண்,பெண்ணுக்கும்.சிறுவர் சிறுமியருக்கும், அடிமைக்கும் கடமையாகும். 

இவர்களின் செலவுக்குப் பொறுப்பேற்கும் குடும்பத்தலைவர் இவர்களுக்காக ஸகாத்துல் பித்ர் கொடுக்கவேண்டும். பொறுப்பிலுள்ளோர் தாமாகக் கொடுக்கும் வசதியைப் பெற்றால் அவர்களும் வழங்கலாம்.

யாருக்கு வழங்கவேண்டும்?

ஸகாத் பெறக் கடமையான ஏழைகளுக்கும், கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கவேண்டும்.

எதை வழங்க வேண்டும்?

நாம் ஊரில் வழமையாக உட்கொள்ளும் உணவுப் பொருளான அரிசி, கோதுமை, பேரீத்தம் பழம், போன்றவையாகும்

எவ்வளவு வழங்கவேண்டும் ?

ஒரு ஸாஃ – என்பது நாலு முத்துகளாகும். ஒரு முத்து என்பது நடுத்தரமான ஒருவருடைய இரு கைகள் நிறைய உள்ள தானியத்தை அளந்தால் வரும் எடையைக்குறிக்கும். 

அவ்வாறு நான்கு முத்துகள் ( ஒரு ஸாஃ) 2 கிலோ 400 கிராம் எடையுள்ள தானியம் என.மார்க்க அறிஞர்கள் நிர்ணயித்துள்ளனர்.

எங்கே வழங்கவேண்டும்?

நாம் வாழும் ஊரிலுள்ள ஏழைகளுக்கு வழங்கவேண்டும். அவர்களை விட நமது தாய் நாட்டில் ஏழைகளாக நமது உறவினர்கள், அண்டை அயலார்கள், ஊர் மக்கள் இருந்தால் அவர்களுக்கே முதலிடம் வழங்க வேண்டும்.

வெளிநாட்டிலிருப்போர் தமது சொந்த ஊரிலே வழங்குவதாயின் அவரது பெருநாள் தொழுகைக்கு முன்னர் வினியோகிக்கப்படவேண்டும். 

அவரது சொந்த ஊரில் ஒரு நாளோ இரு நாட்களோ பிந்தி பெருநாள் கொண்டாடலாம். அவ்வாறு பிந்திக் கொடுப்பதால் அவரது ஸகாத்துல் பித்ர் அங்கீகரிக்கப்படமாட்டாது.

எந்த நேரத்தில் வழங்கவேண்டும்?

ஷவ்வால் பிறை பிறந்தது முதல் பெருநாள் தொழுகைக்கு செல்வது வரை வழங்கவேண்டும். பெருநாள் தொழுகைக்கு முன்னர் வழங்கப்படும் தர்மம் கடமையான (பர்ளான) தர்மமாக் கருதப்படும்.அதன் பிறகு வழங்கப்படும் தர்மம் சாதாரண தர்மமாகவே கருதப்படும்.
Tags:
Privacy and cookie settings