சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் சுவாதியின் சித்தப்பா கோவிந்தராஜன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:
சுவாதி படுகொலை குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல் அவரது குடும்பத்தினரை கவலைக்கு உள்ளாக்கியது. நாமெல்லாம் ஒன்றாக இருந்து குற்றவாளியை
கண்டுபிடிப்பது தான் நோக்கமாக இருக்க வேண்டும். கொலையாளியை உடனடி யாக கைது செய்ய வேண்டும். இதில், ஜாதி, மதம், அரசியல் வேண்டாம். எங்களது குழந்தை குறித்து எங்களுக்கு நன்கு தெரியும்.
தயவு செய்து சுவாதி குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். பொதுமக்கள் யாரேனும் கொலையாளியை செல் போனில் புகைப்படம் எடுத்திருந் தாலோ,
நேரில் பார்த்திருந்தாலோ போலீஸாரிடம் தகவல் தெரிவித் தால் இந்த வழக்குக்கு உறுதுணை யாக இருக்கும் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
தகவல் தந்தால் சன்மானம்
சென்னை ரயில்வே போலீஸ் அதிகாரி ‘தி இந்து’விடம் கூறும் போது, ‘‘சந்தேகிக்கப்படும் குற்ற வாளி தொடர்பாக பொதுமக்கள் 1512 அல்லது 9962500500 என்ற எண்ணுக்கு தகவல் தரலாம்.
தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். தகவல் உண்மையாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்’’ என்றார்.
சுவாதிக்கு நினைவு அஞ்சலி
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியின் மறைக்கு ஐடி ஊழியர்கள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், குடும்ப உறுப்பினர்கள், ஐடி ஊழியர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.