கபாலி பாடல்களைக் கசிய விட்டது யார்?

ரஜினியின் கபாலி பாடல்களைக் கசிய விட்டது யார் என்ற உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜூன் 12 ம் தேதி மாலை 6 மணியளவில் கபாலி பாடல்களை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. 
கபாலி பாடல்களைக் கசிய விட்டது யார்?
ஆனால் 10 ம் தேதியே இப்படத்தின் பாடல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இனியும் தாமதம் செய்யக்கூடாது என்று முடிவெடுத்து

இப்படத்தின் பாடல்களை ஒருநாள் முன்னதாகவே படக்குழு வெளியிட்டது. எனினும் பாடல்களைக் கசிய விட்டது யார்? என்று படக்குழு நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட 

தொலைத் தொடர்பு நிறுவனம் இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது. அந்த நிறுவனத்தின் ரிங்டோனுக்காக படத்தின் பாடல் மற்றும் வசனங்களை படக்குழுவினர் வழங்கியிருந்தனர்.

பெரும்தொகை கொடுத்து பாடல் மற்றும் வசனங்களை வாங்கிய நிறுவனம் தங்களது லாபத்திற்காக பாடல் வெளியீட்டிற்கு முன்பே பாடல் மற்றும் வசனம் இரண்டையும் வெளியிட்டு விட்டது. 

இந்த விஷயம் படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட ஒருநாள் முன்பாகவே பாடல்களை வெளியிட்டு இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். 

மேலும் படம் வெளியாகும் வரை சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும் முடிவு செய்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான கபாலி படத்தின் பாடல்களை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினாலும், 
கபாலி பாடல்களைக் கசிய விட்டது யார்?
இப்பாடலின் வரிகள் சர்ச்சையை உண்டு பண்ணுவதாக சமூக வலை தளங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன. மேலும் இயக்குநர் ரஞ்சித்தின் ஜாதியை வைத்து பலர் அநாகரிகமான முறையில் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அதே நேரம் தேவர் மகன், சின்னக்கவுண்டர், கொம்பன் படங்களை ரசித்தவர்கள் ரஞ்சித்தை விமர்சிப்பது ஏன்? 

என ரஞ்சித்திற்கு ஆதரவுக் குரல்களும் எழுந்துள்ளன. இதனால் இணையம் தொடங்கி பல இடங்களிலும் கபாலி பாடல்கள் விமர்சனப் பொருளாகியுள்ளது.
Tags:
Privacy and cookie settings