கபாலியாக உருவானது எப்படி?

ரஜினி எப்படி ‘கபாலி’யாக உருவானார் என்பது குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியா கியுள்ளது. அதைப் பார்ப்போம்... ரஜினி நடிப்பில் பெரிய எதிர் பார்ப்பை ஏற்படுத் தியுள்ள படம் ‘கபாலி’. 
கபாலியாக உருவானது எப்படி?
தமிழ் சினிமாவில் இரண்டு படங்களே இயக்கிய பா.ரஞ்சித் என்ற இளம் இயக்கு னரின் படத்தில் ரஜினி எப்படி நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது அனைவ ரையும் இன்னமும் ஆச்சர்யத்தில் ஆழ்த் தியுள்ளது.

அந்த வகையில் ‘கபாலி’ படம் எப்படி ரஜினி வசம் சென்றது. அவர் எப்படி இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது பற்றிய புதிய தகவல் களை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா வெளியிட் டுள்ளார்.

இது குறித்து சவுந்தர்யா கூறும் போது, நான் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக ‘கோவா’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ரஞ்சித்தின் அறிமுகம் கிடைத்தது. 

அவருடைய முதல் படமான ‘அட்டக்கத்தி’-ஐ நான் தயாரிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், ஒருசில காரண ங்களால் அது முடியாமல் போனது.

அதன்பிறகு, ‘மெட்ராஸ்’ படம் வெளிவந்த பிறகு, அந்த படத்தை பார்த்து விட்டு அப்பா ஒருநாள் என்னை அழைத்து ‘மெட்ராஸ்’ படம் மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார்.

உடனே, எனது மனதுக் குள் ரஞ்சித்தும், அப்பாவும் சேர்ந்து பணியாற் றினால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் ஓடியது.
பிறகு, ரஞ்சித்தை ஒரு நாள் சந்தித்து அப்பாவுக்கு ஒரு கதை பண்ணு கிறீர்களா? என்று கேட்டதும், அவர் உறைந்தே போய் விட்டார். 

சில நாட்கள் கழித்து ரஞ்சித், என்னிடம் வந்து அப்பா நடிக்கும் படத்தில் அவர் ‘மலேசியா டானா’க வருகிறார் என்று சொன்னதும், 

அதுவே போதுமா னதாக இருந்தது. இதை அப்பாவிடம் போய் சொன்னேன். அவருக்கும் பிடித்தி ருந்தது. அதுதான் இன்றைய ‘கபாலி’ என்று கூறினார்.
Tags:
Privacy and cookie settings