கோழியுடன் படகு மூலம் உலகைச் சுற்றி வரும் இளைஞர் !

பிரான்ஸை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது செல்லப் பிராணியான கோழியுடன் படகு மூலம் உலகைச் சுற்றி வருகிறார். 24 வயதான குய்ரெக் சோதீ எனும் இந்த இளைஞர் பிரான்ஸின் பிரிட்டானி நகரைச் சேர்ந்தவர். 
39 அடி நீளமான படகு மூலம் உலகைச் சுற்றி வரும் பயணத்தை இவர் 2014 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அவர் ஒரு கோழியையும் இப்பயணத்தில் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார். 

இக் கோழிக்கு மோனிக் என பெயரிடப்பட்டுள்ளது. 2014 மே மாதம் ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியிலுள்ள கனேரி தீவுகளிலிருந்து இப் பயணத்தை குய்ரெக் சோதீ ஆரம்பித்தார்.

இரு வருட காலமாக குய்ரெக்கும் கோழியும் இப் பயணத்தை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அண்மைக் காலத்திலேயே இது தொடர்பில் பிரெஞ்சு ஊடங்களின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

இப் பயணத்தில் பெரும்பாலான நேரம் படகின் மேற்பகுதியில் இருந்தவாறு கடலை பார்த்துக் கொண்டிருக்கும் இக்கோழி, அவ்வப் போது முட்டைகளையும் இடுமாம். 

இக் கோழியை குளிரிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட ஆடைகளை யும் தயாரித்துள்ளார் குய்ரெக். நான் இப்பயணத்தை ஆரம்பிக்கும்போது சுமார் 4,5 மாத வயதுடையதாக இக் கோழி இருந்தது. 

ஆரம்பத்தில் ஒரு பூனையை இப் பயணத்தில் இணைத்துக் கொள்வதற்கு தான் விரும்பியதாகவும் 
ஆனால், அதை பராமரிப்பதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கும் எனக் கருதியதால் இக் கோழியை தான் இணைத்துக் கொண்டதாக குய்ரெக் சோதீ தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings