சுவாதியின் மரணத்தில் ஜாதி சர்ச்சை.. சோஷியல் மீடியா !

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்ட இன்போசிஸ் ஊழியரான சுவாதி குறித்து சோஷியல் மீடியாக்களில் தங்களது இஷ்டப்படி யெல்லாம் வாத விவாதங்களில் 
மக்கள் ஈடுபடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல உள்ளது. சுவாதி கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, கொலையாளி அவரிடம் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

சுவாதிக்கு, கொலையாளி ஏற்கனவே தெரிந்த நபர் என்று இதன் மூலம் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சுவாதி ஒருவரை காதலித்து வந்ததாகவும், கொலையாளி சுவாதியை ஒருதலையாக காதலித்திருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகின.

சென்னை ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் பகிரங்கமாகவே, சுவாதிக்கு வேறு ஒரு ஆண் நண்பர் இருந்ததாகவும், கொலையாளி நபர் யார் என்பதுதான் தெரியவில்லை என்றும், மீடியாக்களுக்கு பேட்டியே கொடுத்தார்.

இதையெல்லாம் சோஷியல் மீடியாக்கள் விவாத பொருளாக்கியுள்ளன. சுவாதி இரு ஆண்களை காதலித்து ஏமாற்றியிருக்கலாம் என்று சிலர் கருத்து கூறும் அளவுக்கு சோஷியல் மீடியாக்களில் விஷம் கக்கப்படுகிறது.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் போன்ற ஒரு பொது இடத்தில் நடைபெற்ற குற்றம் என்பதால் மீடியாக்கள் இதற்கு முக்கியத்துவம் தருகின்றன. ஆனால் சோஷியல் மீடியாக்களில் ஒரு பிரிவினர், 

சுவாதி மேல் ஜாதி என்பதால் அவரது கொலைக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தருகின்றன என்று ஜாதி சாயம் பூசி பதிவிடுவதையும் பார்க்க முடிகிறது.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால், சுவாதி உயர் ஜாதியை சேர்ந்தவர் என்பதாலேயே ஊடகங்கள் அவரது இமேஜை டேமேஜ் செய்ய பார்க்கின்றன என்று 

மற்றொரு பிரிவினரும் ஆக்ரோஷமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் கருத்து பதிவு செய்து வருகிறார்கள். இதனால் குற்றத்தின் பின்னணி, குற்றவாளி கைது, வருங்கால பாதுகாப்பு போன்ற முக்கிய விஷயங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆங்கில பத்திரிகையொன்றுக்கு மட்டும் பேட்டியளிக்க சம்மதித்த சுவாதியின் தந்தை, சந்தான கோபாலகிருஷ்ணன், இதுகுறித்து அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"சுவாதியின் உயிரை யாரும் திரும்பி கொண்டுவர முடியாது எனும்போது, அவரது மாண்பை குலைத்து, பெயரை கெடுப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

சுவாதியின் குடும்பத்தார், பொதுமக்கள் மீதும், போலீசார் மீதும் மிகுந்த ஆதங்கத்தில் உள்ளனர். சுவாதியின் ஐடி கார்டு பிளாட்பாரத்தில் கிடந்தும்கூட, குடும்பத்தாருக்கு 

முன்கூட்டியே யாரும் தகவல் கொடுக்கவில்லை என்பது அவர்கள் ஆதங்கம். கொலை காலை 6.30 மணியளவில் நடைபெற்றபோதும், காலை 8 மணியளவில்தான், சுவாதியின் தந்தைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கான்ஸ்டபிள் அவரது வீட்டுக்கு சென்று தகவல் சொல்லியுள்ளார். இது மிகவும் மெத்தன செயல் என்று அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார் சந்தான கோபாலகிருஷ்ணனின் சகோதரர் கோவிந்தராஜன்.
Tags:
Privacy and cookie settings